“யாரு நான் சின்ன குழந்தை மாதிரி நடக்குறேனா? இதுக்காகவே வர முடியாதுடா... ம்ம்ம்ம்... ராஜ்...” என்றாள் அவள் கண்களை உருட்டிக் கொண்டே!
“ராஜ்????”
“உங்களுக்கு அந்த பேரு சொன்னால் பிடிக்காதாமே... கேள்விப் பட்டேன்! அதான் கூப்பிட்டேன்...”
அவனின் உதட்டில் புன்னகை தோன்றியது!
“வேற யாராவது சொன்னால் பிடிக்காது தான்... ஆனால் நீ சொன்னால் நோ ப்ராப்ளம்ஸ்...”
அவள் உதட்டை பிதுக்கினாள்!
“இப்படியெல்லாம் சொன்னால் கூட நான் வர மாட்டேன்... நீங்க போயிட்டு வாங்க... நான் கார்லேயே இருக்கேன்... யாராவது கேட்டா நான் ஆஃபிஸ்ல இருக்கேன்னு சொல்லிடுங்க...”
“அதெல்லாம் சொல்ல முடியாது... இப்போ நீ வர போறீயா இல்லையா??”
“வர முடியாது என்ன செய்வீங்க?”
“என்ன செய்வேனா? தூக்கிட்டுப் போவேன்...”
“அப்படியா? எங்கே தூக்கிட்டுப் போங்க பார்ப்போம்...”
தியாகு கொஞ்சம் திகைத்துப் போனான்... ஏதோ பேச்சிற்காக தான் சொன்னான்...
அவளை கையில் தூக்கி செல்வதா???? யோசிக்கும் போதே செய்தால் என்ன என்றும் தோன்ற, காரில் இருந்து இறங்கி அவள் பக்கம் இருந்த கதவை திறந்து அவளை வெளியே இழுத்து அலேக்காக கைகளில் தூக்கினான்!
Like & Follow our Facebook Page to be notified of the new episodes immediately.
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
தொடரும்...