(Reading time: 7 - 13 minutes)
Rojavai thalattum thendral
Rojavai thalattum thendral

“நீங்க வீட்டுல நடந்துக்கிட்ட இன்டிசன்ட் ஆன விதத்துக்கு உங்களை நான் கேவலமா திட்டி இருக்கனும்... ஏதோ ஹெல்ப் செய்றீங்களேன்னு தான் அமைதியா போறேன்...” என்றாள்.

   

முகம் சிவந்தது என்ன? வெட்கப் பட்டது என்ன... ! இப்போது அது இன்டிசன்ட்டாம்...! அது சரி...!

   

மேடம் கெத்து மெயின்டெயின் செய்கிறார்கள் போலும்...!

   

“எதை சொல்ற கீர்த்தி??? நீ என் மேல வந்து இடிச்சதையா? இல்ல நான் உன்னை விழாமல் தாங்கி பிடிச்சதையா??? எதை சொல்ற????”

   

தியாகு வேண்டுமென்றே கேட்க, அவள் அவனை தன் பாணியில் முறைத்து விட்டு, எதுவும் சொல்லாமல் சென்றாள்...

   

அவன் முகத்தில் தானாக சிரிப்பு தோன்றியது...

   

இது போன்ற சந்தோஷ சாரல்களுக்கு நடு நடுவே அவளிடம் இருந்து அவ்வப்போது கோபம் + திட்டு + கத்தல் கேட்கவும் அவன் தவறவில்லை...

   

தோட்டத்தில் அவள் ஆசை ஆசையாக பூச்செடிகளை வாங்கி பராமரிப்பதை பார்த்து அவளுக்காக அவன் அழகிய பூச்செண்டு பரிசளித்தால் அது நேராக குப்பை தொட்டிக்கு போனது...

   

அதே போல் விஜய் வரும் போதெல்லாம் தவறாமல் அவன் முன் தியாகுவை நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஏதாவது சொல்லி வருத்தப் படுத்தவும் செய்தாள்...

   

இதற்காகவே விஜய் அவர்களின் வீட்டிற்கு வருவதையே தவிர்க்க ஆரம்பித்திருந்தான்...

   

வீடு கட்டும் போது இடும் ஃபவுன்டேஷன் போன்றது தான் திருமண வாழ்வில் இருக்கும் அன்பும், புரிதலும்...

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.