அமர்ந்தாள். அவனும் மேலே ஒன்றும் சொல்லாமல் மறுபக்கம் காரில் ஏறி, அதை கிளப்பினான்.
தியாகு முகத்தில் மின்னிய புன்னகையுடன் அமைதியாக காரை ஓட்ட, அவனின் அருகில் முகத்தில் கோபம் பொங்க அமர்ந்திருந்தாள் அவள்.
மற்ற நாட்களில் அவள் நிஜமாகவே கோபமாக இருப்பதாக நினைத்திருப்பான்... இப்பொழுது இது முழுக்க முழுக்க நிஜமில்லை என்று தோன்றியது...
அவளை சீண்ட, தீண்ட, மீண்டும் அந்த வெட்கத்தைப் பார்க்க அவனுக்கு ஆர்வமாக தான் இருந்தது! ஆனால் கிருத்திகாவிடம் பேசி பழகிய நாட்களில் தியாகு சில விஷயங்களை தெளிவாக புரிந்துக் கொண்டிருந்தான்!
கிருத்திகா அவளின் வேலையில் பாலின பாரபட்சங்களை சந்தித்திருக்கிறாள்! அது அவளின் கரீயரில் மட்டும் அல்லாது தனிப்பட்ட வாழ்விலும் தாக்கங்களை ஏற்படுத்தி இருக்கிறது!
இந்த புரிதல் அவனிடம் இருந்ததால் அவள் மீது அவனின் காதலை திணிக்காமல் அவளே உணர்ந்துக் கொள்ளும் வரை காத்திருக்க விரும்பினான்! கிருத்திகாவிற்கு அவன் மீது காதல் இருக்கிறது என்ற நம்பிக்கை அவனுக்கு அதிகமாகவே இருந்தது! அதை அவளாக வெளிப்படுத்தட்டும் என்று தான் காத்திருந்தான்...
பொறுமையை இழுத்துப் பிடித்து வைத்துக் கொண்டு தான் காத்திருந்தான்! ஆனால் அப்படி காத்திருப்பதிலும் அவனுக்கு சுகம் இருக்க தான் செய்தது!
மனதில் ஓடிய எண்ணங்களை வெளிப்படுத்தாது அவளின் ஆஃபிசின் வாயிலில் அவன் காரை நிறுத்த, அவள் எதுவும் சொல்லாமல் காரில் இருந்து இறங்கினாள்.
“கீர்த்தி, ஒரு தேங்க்ஸ் சொல்லிட்டுப் போனால் நான் சந்தோஷப் படுவேன்...”
அவனை ஒரு பார்வை பார்த்த கிருத்திகா,