விட்டா!!! புது சப்பாத்தி எல்லாம் இங்கே இருக்கு... நீ அதை வச்சுட்டு இதை எடுத்து சாப்பிடு."
"கஷ்டம்! ஒரு சப்பாத்தி கூட செய்ய தெரியாதா? பேச சொல்லுங்க... வாய் இங்கே இருந்து அங்கே வரை போகும்... அது ஒன்னு தான் தெரியும் வேற என்ன தெரியும்? முதல்ல ஒழுங்கா எதையாவது சமைக்கக் கத்துக்க சொல்லுங்க அண்ணி...."
படபடவென்று பொரிந்தவனை திகைப்புடன் பார்த்தாள் கீதா. அவள் ஏதோ விளையாட்டாக சொல்ல போய், இது ஏதடா வம்பாகி விட்டதே...
மேலே எதுவும் பேசாமல் அவசரமாக சாப்பிட்டு முடித்த சஞ்சீவ்,
"ச்சே.... காலையிலே சரியா சாப்பிட கூட முடியலை...." முனுமுனுத்தப்படி கை கழுவி விட்டு சென்றான்.
சஞ்சீவும் கீதாவும் பேசிய அனைத்தும் இந்துவின் காதில் தெளிவாய் விழுந்திருந்தது. அதுவரை அவள் முகத்தில் இருந்த மலர்ச்சி காணாமல் போனது. சஞ்சீவ் வேலைக்கு கிளம்பும் போது அவனை வழி அனுப்ப இந்துவை அனுப்பி வைக்க என அவசரமாக சமையல் அறை பக்கம் வந்தாள் கீதா. கீதா வரும் அரவம் உணர்ந்து எப்போதும் போல் முகத்தை சாதாரணமாக காட்டிக் கொள்ள முயன்று இந்த முறை தோற்றுப் போனாள் இந்து!
இந்துவின் முகத்தை பார்த்த உடனேயே கீதாவிற்கு விஷயம் புரிந்துப் போனது. ஆனால் எதையும் காட்டிக் கொள்ளாமல்,
"இந்து, சஞ்சீவ் கிளம்புறார், நீ போய் அவரை அனுப்பிட்டு வா," என்றாள்.
பொதுவாக மற்ற நாட்களில் கீதாவிற்காக, காஞ்சனாவிற்காக என்று இந்து சஞ்சீவை கார் வரை சென்று வழி அனுப்புவது வழ
{/f90filter}
க்கம் தான். ஆனால் இன்று மற்ற நாட்கள் போல் நடிக்க அவளால் முடியவில்லை. அவள் தயக்கத்துடன் நிற்கும் போதே,
"கிளம்புறேன் அண்ணி..." என்றபடி சஞ்சீவ் அங்கே வந்து சேர்ந்தான்.