இந்துவிடம் அன்பொழுக இல்லை என்றாலும் சாதாரணமாகவாவது பேச வேண்டும் என்ற முடிவுடன் அன்று மாலை வீட்டிற்கு திரும்பினான் சஞ்சீவ். அவன் வந்தப் போது ஹாலில் ஒரே சிரிப்பு சத்தமாக இருந்தது.
வீணா வந்திருப்பதை பார்த்து தெரிந்துக் கொண்டான். இந்துவை தவிர குடும்பத்தினர் அனைவரும் அங்கே தான் இருந்தனர். அதை மனதில் எண்ணியப்படி,
"எப்படி இருக்கீங்க வீணா?" என்றான்.
"வாங்க மாப்பிள்ளை சார்! நான் நலம், நீங்க எப்படி இருக்கீங்க? ரொம்ப பிஸின்னு கேள்வி பட்டேன்..." என்றாள் வீணா கேலி மின்ன!
"ஆமாம் நிறைய புது கிளையன்ட்ஸ் கிடைச்சிருக்காங்க அது தான் கொஞ்சமா பிஸி..."
"அடடா, புது மாப்பிள்ளை பேசுற பேச்சா இது? கிளையன்ட்ஸ் எல்லாம் எங்கே போக போறாங்க, மெதுவா கவனிக்கலாம். இப்போ நீங்க கவனிக்க வேண்டியது இந்து மேடமை மட்டும் தான். இந்து கல்யாணத்துக்கு அப்புறம் ஒரு தினுசா தான் இருக்கா..."
"சொல்லுமா வீணா, எதையாவது சொன்னால் கேட்டா தானே?" என்றாள் காஞ்சனா.
"அது சரி ஆன்ட்டி, இந்து சொல்லியே கேட்காதவர் நீங்களும் நானும் சொல்லியா கேட்க போறார்?"
சஞ்சீவ் வீணாவிற்கு பதில் சொல்லும் முன்,
"சரி சரி பாவம், அவரை கொஞ்சம் நேரம
{/f90filter}
் விடு வீணா! சஞ்சீவ், போய் ரெப்ரெஷ் ஆகிட்டு வாங்க, டிஃபன் சாப்பிடலாம்" என்றாள் கீதா.
சஞ்சீவும் அதை ஏற்றுக் கொண்டு அங்கே இருந்து கிளம்பி அவர்களின் அறைக்கு சென்றான்.