(Reading time: 8 - 16 minutes)
Uyir Ketkum amutham nee...!
Uyir Ketkum amutham nee...!

வேண்டாமே?"

   

இந்து முகம் சுவிட்ச் தட்டியதை போல் பிரகாசமானது.

   

"இது... இது தான் இந்துக்கு அழகு... சஞ்சீவாவது உன்னையாவது ஹர்ட் செய்றதாவது...."

   

இந்து பதிலாக புன்னகை மட்டும் புரிந்தாள். அவள் மனதில் இருந்த சஞ்சலம் அகன்றிருந்தது, மாறாக புது கேள்விகள் தோன்றி இருந்தது. சஞ்சீவ் என்ன தான் நினைக்கிறான்? ஒரு பக்கம் அன்பை காட்டுகிறான், மறு பக்கம் அவளை நோகடிக்கவும் செய்கிறான்...

   

 🌼🌸❀✿🌷

   

இந்து மனதில் குழம்பிக் கொண்டிருந்த நேரத்தில் சஞ்சீவும் கிட்டத்தட்ட அதையே தான் மனதில் நினைத்து வருத்தப் பட்டுக் கொண்டிருந்தான். காரை ஓட்டியப் போதும் அவன் மனதில் வீட்டில் இருந்து கிளம்பும் முன் சமையலறையில் தென்பட்ட இந்துவின் வருத்தமான முகம் தோன்றி சங்கடப் படுத்திக் கொண்டிருந்தது.

   

இன்று சமையலறையில் பார்த்த இந்துவையும், முதல் நாள் எம்.டியாக பார்த்த இந்துவையும் ஒப்பிட்டுப் பார்த்ததில் அவனுக்கு அவன் மீதே கோபமாக வந்தது. இளவரசி போல் இருந்தவளை எப்படி மாற்றி விட்டான்! ஆனால் இதை அவள் அவன் மேல் இருக்கும் அன்பிற்காக செய்கிறாள் என்னும் எண்ணம் அந்த வருத்தத்திற்கு இடையே கொஞ்சம் மகிழ்ச்சியையும் தந்தது. அதற்காக மகிழ்வதற்காகவும் அவனுக்கு அவன் மீதே கோபமும் வந்தது.

   

ஓரு வழியாக மருத்துவமனையை அடைந்தவன், ஆய்விற்காக அனைத்தும் தயாராக இருப்பதை கேட்டு அறிந்துக் கொண்டு தன் அறைக்கு சென்றான். கையில் மொபைலை எடுத்தவன், ஒரு சில வினாடிகள் சிந்தித்து விட்டு மீண்டும் கீழ

{/f90filter}ே வைத்தான். அவனால் இந்துவை வெறுத்து ஒதுக்கவும் முடியவில்லை, எதுவுமே நடக்கவில்லை என்று தானாக கீழே இறங்கவும் மனமில்லை... என்ன செய்வதென்று புரியாமல் தவித்தான்!

   

  🌼🌸❀✿🌷

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.