(Reading time: 7 - 14 minutes)
Uyir Ketkum amutham nee...!
Uyir Ketkum amutham nee...!

"ஆமாம் சஞ்சீவ் அப்பாக்கள் எல்லாம் முன்னாடியே முன்னேறிட்டாங்க, அது தான் நாங்க எல்லாம் இப்போ அதையே செய்ய முயற்சி செய்றோம்..."

   

சஞ்சீவ் அதற்கு பதில் சொல்லும் முன், பேச்சு தவறான திசை நோக்கி போவதை உணர்ந்திருந்த இந்து,

   

"உங்களுக்கு டிஃபன் எடுத்து வச்சிருக்கேன்..." என்றாள்.

   

"ஆமாம் சஞ்சீவ் சார், இந்து மேடம் எவ்வளவு நேரமா டிஃபன் எடுத்து வச்சுட்டு உங்களுக்காக காத்திருக்காங்க... இப்படியா அவங்களை காத்திருக்க விடுறது?” என்றாள் வீணா.

   

இந்த முறை பதிலுக்கு எதையும் சொல்லாமல், ஒரு புன்னகையை விடையாக கொடுத்து விட்டு, உணவறை பக்கம் சென்றான் சஞ்சீவ்.

   

 🌼🌸❀✿🌷

   

அன்றிரவு, நண்பன் ஒருவனிடம் மொபைலில் பேசி விட்டு திரும்பிய சஞ்சீவ், அவர்களின் அறையில் இருக்கும் பொது இடத்தில், அவன் மாலையில் அமர்ந்திருந்த அதே சோஃபாவில் இந்து அமர்ந்திருப்பதைக் கண்டான். அவனுக்காக காத்திருப்பவள் போல் அவன் வந்த உடன் எழுந்தவள்,

   

"உங்க கூட கொஞ்சம் பேசணும்,” என்றாள் சீரியஸாக!

   

"என்ன?" என்று சாதாரணமாக கேட்டாலும், இந்து என்ன கேட்கப் போகிறாள் என்று தெரிந்துக் கொள்ளும் ஆர்வம் அவனுக்குள் அலை

{/f90filter}

மோதியது! ஒருவேளை அவர்களின் வாழ்க்கையை பற்றி தான் பேசப் போகிறாளோ???

   

"உங்களுக்கு கோபம் என் மேல தானே? தேவை இல்லாம ஏன் அடுத்தவங்களை வம்புக்கு இழுக்குறீங்க?"

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.