என்றாள் சற்றே இறங்கிய ஆனால் விபரம் அறிந்துக் கொள்ளும் குரலில்!
இதை தான் அவள் கேட்க வேண்டும் என அவன் விரும்பி இருந்தான்... ஆனால் அதை அவள் கேட்ட விதம் அவனுக்கு பிடிக்கவில்லை. எனவே,
"உன் பேச்சை பிடிக்கலை, உன் சிரிப்பை பிடிக்கலை... மொத்தத்தில் எனக்கு உன்னையே பிடிக்கலை! முடிஞ்சா அது எல்லாத்தையுமே மாத்து..." என்றவன், இந்து பதில் சொல்லும் முன்பே அங்கிருந்து நகர்ந்து அவனின் அறைக்குள் சென்று கதவை தாளிட்டுக் கொண்டான்.
இந்துவிற்கும் கோபம் பொங்கியது! ஆனாலும் அவள் சஞ்சீவை போல் நிதானத்தை இழக்கவில்லை. மீண்டும் சோஃபாவில் அமர்ந்தவள், ஒரு சில வினாடிகள் முயற்சி செய்து தன்னை தானே அசுவாசப் படுத்திக் கொண்டாள். பின், அடுத்து செய்ய வேண்டியதை பற்றி சிந்தித்தாள்.
🌼🌸❀✿🌷
மறுநாள் சஞ்சீவ் வழக்கம் போல் உணவு உண்ண வந்த போது, இந்து தான் அவனுக்கு உணவு பரிமாறினாள். கூடவே காஞ்சனா, கீதா, ராஜீவும் இருக்கவே எதையும் சொல்லாமல் அமைதியாக அவள் கொடுத்த இட்லியை சாப்பிட தொடங்கியவன், ராஜீவின் பேச்சை வைத்து அன்றைய சட்னி இந்து செய்தது என்பதை புரிந்துக் கொண்டான். எனவே வேண்டுமென்றே சட்னியை சுவைத்து விட்டு,
"என்ன இது? இப்படி காரம்? யார் செய்தது?" என்றான்.
இந்துவை அவன் எதுவும் சொல்லி விடக் கூடாதே என்று காஞ்சனா பதில் சொன்னாள்.
{/f90filter}
"இந்து செய்த சட்னி தான் சஞ்சீவ்! நான் தான் கொஞ்சம் காரம் கூடுதலாக போட சொன்னேன்... இந்து இவ்வளவு சீக்கிரம் சமையல் கத்துப்பான்னு நான் எதிர்பார்க்கவே இல்லை..."