(Reading time: 7 - 14 minutes)
Uyir Ketkum amutham nee...!
Uyir Ketkum amutham nee...!

இந்து வீணாவிடம் அவன் பேசியது பற்றி சொல்கிறாள் என்பது புரிந்தபடியால் சஞ்சீவினுள் ஏமாற்றம் பரவியது. அதன் எதிரொலியாக,

   

"இதுக்கு எல்லாம் நான் உன் கிட்ட அனுமதி வாங்கனும்னு எனக்கு தோணலை..." என்றான் எரிச்சலுடன்!

   

“வீணா என் ஃப்ரென்ட். என்னை மீட் செய்ய வந்திருந்தா. நீங்க தேவை இல்லாம அவக் கிட்ட இந்த மாதிரி பேசுறது சரி கிடையாது!”

   

மண்ணாங்கட்டி! என மனதுள் புலம்பிய சஞ்சீவ், “அது என் இஷ்டம்! எனக்கு என்ன தோணுதோ அப்படி தான் நான் பேசுவேன்,” என்றான்.

   

"ஏன் சஞ்.. ஏன் உங்களுக்கு இந்த வீண் பிடிவாதம்?"

   

ஏற்கனவே, சில நாட்களாக கைக்கு எட்டியும் வாய்க்கு எட்டாது வாழும் வாழ்க்கையை நினைத்து மனதில் புழுங்கி கொண்டிருந்த சஞ்சீவ், இந்து அவன் பெயரை சொல்ல தொடங்கி மாற்றவும், இன்னமும் கோபம் கொண்டான். அவன் சொன்னதை தான் அவள் செய்கிறாள் என்பதை உணராத வண்ணம் அவனின் கோபம் அவன் மூளையை மழுங்கடித்தது!

   

"யாருக்கு பிடிவாதம்? ஹலோ, உன்னை நான் நம்ம கல்யாணத்திற்கு முன்னாடியே வார்ன் செய்தேன்... இப்போ இந்த தேவை இல்லாத பேச்சு எல்லாம் எதுக்கு?"

   

"ஏன் இப்படி பேசுறீங்க? நாம் எப்போவும் இப்படியே இருக்க முடியுமா?"

   

"ஆமா இப்படியே இருக்க வேண்டியது தான்!" என்றான் சஞ்சீவ், அவனுடைய கோபம் பேச்சிலும்

{/f90filter}

எதிரொலிக்க.

   

ஒன்றிரண்டு வினாடிகள் அவனையே பார்த்தப்படி இருந்த இந்து,

   

"நான் என்ன செஞ்சா இதை மாத்த முடியும்ன்னு சொல்லுங்க நான் முயற்சி செய்றேன்..." 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.