(Reading time: 7 - 14 minutes)
Uyir Ketkum amutham nee...!
Uyir Ketkum amutham nee...!

அம்மா புகழ்ந்து தள்ளவும், அதற்கு மேல் என்ன சொல்வது என்று புரியாமல், அமைதியாக உணவை முடித்துவிட்டு கிளம்பினான் சஞ்சீவ்.

  

இப்படி இந்து பற்றி என்ன சொன்னாலும் அவளுக்கு ஒருவர் மாற்றி ஒருவர் சப்போர்டிற்கு வருவது அவனுக்கு கடுப்பை ஏற்படுத்தி இருந்தது!

   

 🌼🌸❀✿🌷

   

அன்று மாலை சஞ்சீவை சந்திக்க அவனின் நண்பன் விக்ரம் ஃஆபீஸ் வந்திருந்தான். சஞ்சீவின் மருத்துவமனை செய்ன்  பிஸ்னஸிற்கு பண முதலீடு செய்தது விக்ரம் தான். நண்பனை மகிழ்ச்சியோடு வரவேற்றான் சஞ்சீவ்.

   

"வாடா மச்சி, உன்னை பார்த்து எவ்வளவு நாள் ஆச்சு, பணம் எல்லாம் கரெக்டா அக்கவுன்டுற்கு வந்து சேருது தானே?"

   

 "என்ன மாப்பிளை, புது மாப்பிளை வந்ததும் வராததுமா பணம் பத்தி பேசுற?"

   

"நீயும் இன்னமும் புது மாப்பிளை போல தானேடா இருக்க?"

   

"ஆமாம்டா, ஒரு விதத்தில் அது நிஜம் தான்... அதனால தான் சந்தோஷமா உன்னை பார்க்க வந்தேன்... கொஞ்ச நாளா வீட்டுல் ஒரே பாலிடிக்ஸ், நம்ம தலை தான் எல்லாத்துக்கும் உருளும்..."

   

"என்னடா மாமியார் ம

{/f90filter}

ருமகள் டிஷ்யூம் டிஷ்யூமா?"

   

"அது பரவாயில்லையேடா... அவங்க இரண்டு பேரும் ஒற்றுமையா இருந்தா தானே பிரச்சனையே!"

   

"புரியுற மாதிரி சொல்லுடா?"

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.