அதற்கு மேல் அமைதியாக இருக்க முடியாமல், "அத்தை ப்ளீஸ், எனக்கு எதுவுமே புரியலை... நீங்க என்ன சொல்றீங்க?" என வினவினாள் இந்து.
"நீ பேசாதே என் கிட்டே... எனக்கு உன் கிட்ட பேசவே விருப்பமில்லை..."
முதல் முதலாக காஞ்சனா கசப்புடன் சொல்லவும், இந்துவின் முகம் வருத்தத்தில் ஒளி இழந்தது! கீதாவால் அதற்கு மேல் அமைதியாக இருக்க முடியவில்லை.
"அத்தை, இந்து பத்தி உங்களுக்கும் தெரியும் தானே... அவக் கிட்ட கேட்டா என்னன்னு சொல்லுவா..."
"எனக்கு எதுவும் கேட்க வேண்டாம் கீதா! அக்காவும் தங்கச்சியும் என்ன வேணா பேசி தெரிஞ்சுக்கோங்க..." என்றாள் காஞ்சனா கோபமாக!
அதுவரை சிலை போல் நின்றிருந்த ரஞ்சனிக்கு என்ன நடக்கிறது என்பது முழுவதுமாக புரியா விட்டாலும், அவளால் தான் இந்து ஏதோ இக்கட்டில் மாட்டி இருக்கிறாள் என்பது புரிய,
"ஆன்ட்டி, ஏன் இப்படி இந்துவை போய் ஹார்ஷா பேசுறீங்க? பசி பசின்னு சொல்லிட்டு இருந்தாங்க. ஆனாலும் வீட்டுல் உங்க கூட சாப்பிடுவேன்னு சொல்லி வந்திருக்காங்க. நீங்க இப்படி அவங்களை நிக்க வச்சு கேள்வி மேல கேள்வி கேட்குறீங்க? நான் தான் இந்துவை ஷாப்பிங் கூப்பிட்டேன்... சாரி, எனக்கு இன்னைக்கு ஃபங்க்ஷன் இருக்குறது எல்லாம் தெரியாது... ரொம்ப சாரி," என்றாள்.
ரஞ்சனி சொல்வதை கேட்டு விட்டு இந்துவின் முகத்தை பார்த்த காஞ்சனா, அவளின் வருத்தம் நிறைந்த, சோர்ந்துப் போன முகத்தை பார்த்து திடுக்கிட்டு போனாள். தவறு செய்து விட்டோமோ என்ற கேள்வி அவளு
{/f90filter}
க்குள் தோன்றியது! எதுவாக இருந்தாலும் பொறுமையாக பேசி இருந்திருக்கலாமோ? இப்படி ரஞ்சனி இருக்கும் போது பேசி இருக்க வேண்டாமோ?
காஞ்சனாவின் அமைதியை கவனித்து விட்டு, கீதா,