(Reading time: 9 - 18 minutes)
Uyir Ketkum amutham nee...!
Uyir Ketkum amutham nee...!

 🌼🌸❀✿🌷

    

கீழே ஹாலில் நடந்தவற்றை எல்லாம் அவர்களின் அறை ஓரமாக நின்று கவனித்துக் கொண்டிருந்தான் சஞ்சீவ். அவனின் முகம் கல்லாக இறுகிப் போய் இருந்தது. 

   

அவன் நினைத்தது தான் நடந்தது... அவன் திட்டம் நூறு சதவிகித வெற்றி தான்... 

   

ஆனால் அவனால் அதில் மகிழ்ச்சி அடைய முடியவில்லை. பசித்து, சோர்ந்து வந்திருந்த இந்துவிடம் காஞ்சனா கடுமையாக பேசியது, அதுவும் மூன்றாம் மனுஷியான ரஞ்சனி முன் பேசியது அவனையும் மிகவும் பாதித்திருந்தது.

   

அவன் காதல் சொன்ன நாள் முதலே, காஞ்சனாவிற்காகவும் சேர்த்து மனதில் நினைத்து நடப்பவளை, இப்படி ஒரு சுழலில் சிக்க வைத்ததற்கு அவனுக்கு அவன் மீதே வெறுப்பாக இருந்தது. 

   

இதை எல்லாம் செய்து அவன் அடைய போவது என்ன? இந்து சொன்னதை போல் ஒன்றுமில்லாததை தான் அவன் பெரிது படுத்துகிறானோ? அவனை பார்க்கும் போது எல்லாம் மலர்ந்து விரியும் அவளின் கண்களும், முகத்தில் தோன்றும் அந்த மலர்சியும் அவன் கண் முன் தோன்றியது... கடவுளே தேவதை போன்றவளை இப்படி அசிங்கப் பட வைத்து விட்டானே!!!!

      

சஞ்சீவ் மிகவும் குழப்பத்தில் இருந்தான்!!!

   

அவனுடைய வாழ்க்கை சற்றே விசித்திரமானது. அவனுக்கும் ராஜீவிற்கும் இரண்டு வருடங்கள் தான் வித்தியாசம் என்றப் போதும், அவர்களுக்குள் சிறு வயது முதலே பெரிய அளவில் ஒட்டுதல் இருந்தது இல்லை. அவர்களின் தந்தை இறந்தப் பிறகு, அவனுடைய அம்மா சற்றே கண்டிப்பான முறையில் மகன்களை வளர்த்தார். ராஜீவ், ஓரளவிற்கு அவனின் அம்மாவை புரிந்துக் கொண்டு அதற்கேற்றார் போல் நடந்தா

{/f90filter}ன். ஆனால் சஞ்சீவ் சிறு வயது முதலே கட்டுப்பாடுகளை எதிர்த்து செயல்படுபவனாகவே வளர்ந்தான்.  சின்ன விஷயம் பெரிய விஷயம் என்ற பாடுபாடு இல்லாமல் எப்போதும் தனக்கு பிடித்ததை தன் விருப்பம் போலவே 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.