"இந்து அந்த பை எல்லாம் அப்படி வச்சுட்டு வா! முதல்ல சாப்பிடு, மணி பத்து ஆக போகுது... வா... ரஞ்சனி நீயும் வா..." என்றாள்.
"இல்லை நான் வீட்டுக்கு கிளம்புறேன்... சாரி இந்து என்னால தான் உங்களுக்கு இந்த கஷ்டம் எல்லாம்..." என்றாள் ரஞ்சனி வருத்தத்துடன்!
இந்து பதில் எதுவும் சொல்லாது நிற்கவும், கீதாவே அவளுக்காக பேசினாள்.
"இல்லை ரஞ்சனி, பெரிசா எதுவும் இல்லை, சின்ன மிஸ் அண்டர்ஸ்டேண்டிங் அவ்வளவு தான்... நீ தனியா போக முடியுமா?"
"டிரைவர் இருக்கார்... பிரச்சனை இல்லை... சஞ்சீவ் கிட்டேயும் சொல்லிடுங்க ப்ளீஸ்... எனக்கு மனசு சரி இல்லை நன் அவன் கிட்ட அப்புறம் பேசுறேன்... பை..." என்று பொதுவாக சொல்லி விட்டு ரஞ்சனி கிளம்பவும், கீதா, இந்துவை கிட்டத்தட்ட கையை பிடித்து இழுத்து உள்ளே அழைத்து சென்றாள்.
அவர்கள் இருவரும் உள்ளே சென்றதும், கண்மணியும் தன் பங்கிற்கு அத்தையை ஒரு முறை முறைத்து விட்டு அவர்களின் பின்னே சென்றாள்.
காஞ்சனா தயக்கத்துடன் அர்ச்சனா பக்கம் திரும்பினாள். என்ன நடந்திருந்தாலும், இந்துவிடம் அர்ச்சனா இருக்கும் போது இப்படி கடுமையாக நடந்திருக்க கூடாது என்று தோன்றியது... அதுவும் ரஞ்சனி இருக்கும் போதே அப்படி பேசி இருந்திருக்க கூடாது!
என்ன சொல்வது என்று புரியாமல் அவள் குழம்பும் போதே,
"வாங்க மாட
{/f90filter}
ில இருக்க உங்க ரூமுக்கு போய் பேசுவோம்..." என்று எதுவுமே நடக்காதது போல் அர்ச்சனா சாதாரணமாக சொல்லவும், மறுத்துப் பேச மனம் வராமல், காஞ்சனாவும் அர்ச்சனாவுடன் மாடிக்கே சென்றாள்.