"கண்மணி, உனக்கு கோபம் வருது சரி, ஆனால் அத்தையோட இடத்துல இருந்து யோசிச்சுப் பார்! அந்த இடத்துல கோபம் வராமல் இருக்குமா? ஏதோ அத்தை என்பதால் இத்தோடப் போச்சு, எங்க அம்மா மாதிரி யாரவதுன்னா அவ்வளவு தான்! சரி நான் போய் மருந்து எடுத்து கொடுத்துட்டு வரேன். நீ இங்கேயே இருக்கப் போறீயா?"
"இங்கேயே இருந்து என்ன செய்ய கீதா அக்கா, இந்து அக்கா தான் தனியா இருக்க போறேன்னு சொன்னாங்களே. நானும் மாடிக்கு வரேன், அப்படியே என் ரூமுக்குப் போறேன்," என்றாள் கண்மணி.
🌼🌸❀✿🌷
இருவருமாக மாடியில் இருக்கும் காஞ்சனாவின் அறையை அடைந்தப் போது, காஞ்சனாவும், அர்ச்சனாவும் மும்முரமாக பேசிக் கொண்டிருந்தார்கள். இவர்களை பார்த்து பேச்சை நிறுத்தி விட்டு,
"இந்து சாப்பிட்டாளா?" எனக் கேட்டாள் காஞ்சனா.
"இல்ல அத்தை," என்ற கீதா, தயக்கத்துடன் அர்ச்சனாவை பார்த்து விட்டு,
"அவளுக்கு இது மாதிரி.... யாரும் கோபமா பேசி கேட்டு எல்லாம் பழக்கம் இல்லை தானே அத்தை..." என்றாள் மெதுவாக.
"பழக்கம் இல்லைன்னா என்ன, பழக்க படுத்திக்க வேண்டியது தான்..." என்றாள் அர்ச்சனா புன்னகையுடன்.
அர்ச்சனாவின் பேச்சிலும், புன்னகையிலும் கீதாவும், கண்மணியும் குழம
{/f90filter}
்பிப் போய் நின்றார்கள்!
அதை புரிந்துக் கொண்டு, "அர்ச்சனா எனக்காக சொல்றாங்க, நீங்க குழம்பிக்காதீங்க, இந்துவை ரொம்ப திட்டிட்டேனோ?" எனக் கேட்டாள் காஞ்சனா.