கீதா என்ன சொல்வது என்று தயங்கி நிற்க,
"ரொம்ப இல்லை, ரொம்ப ரொம்ப ரொம்ப... " என்றாள் கண்மணி.
அதற்கு பதில் ஒன்றும் சொல்லாமல் காஞ்சனா அமைதியாக இருக்கவும், கண்மணியே தொடர்ந்துப் பேசினாள்.
"முதல்ல என்ன விஷயம்ன்னு கேட்காம நீங்க இந்து அக்காவை திட்டினதே தப்பு. அதுவும் ஒரு மூணாம் மனுஷி முன், வெளியே போய் அப்படி சோர்ந்துப் போய் வந்திருப்பவங்களை திட்டினது ரொம்ப ரொம்ப தப்பு... ஒருவேளை, நிஜமாகவே அக்கா பிடிச்சு ஷாப்பிங் போயிருந்தாலும் என்ன தப்பு? ஏன் அத்தான் நினைச்சிருந்தால் தி நகருக்கே போய் அவங்களை அழைச்சுட்டு வந்திருக்க முடியாதா? இது மாதிரி ஒரு ஃபங்க்ஷன் இருக்குன்னு தெரிஞ்சா, இந்து அக்கா ஃபங்க்ஷனை விட கடைக்கு போறது தான் முக்கியம்னு போவாங்களா? அந்த அளவுக்கு நமக்கு அவங்களைப் பத்தி தெரியாதா? அதெல்லாம் விட, அவங்கப் போனது அத்தானோட ஃப்ரென்ட் கூட தானே? அவருக்காக, அவர் சொன்னதுக்காக போறேன்னு தானே நம்மக் கிட்ட காலைல சொன்னாங்க??? அப்புறமும்... ப்ச்... பாவம் அத்தை இந்து அக்கா..."
கண்மணி பேசிக் கொண்டிருக்கும் போது, கீதா எடுத்துக் கொடுத்த மாத்திரையை தண்ணீருடன் விழுங்கிய காஞ்சனா, கண்மணி பேசி முடிக்கவும்,
"இப்போ புரியுது... ஆனால் அப்போ இது எதுவும் தோணலையே கண்மணி..." என்றாள் வருத்தத்துடன்.
"காஞ்சனா, போதும் நீங்க ரொம்ப ஃபீல் செய்ய வேண்டாம்... இதெல்லாம் சின்ன விஷயம்...” என்று காஞ்சனாவை தேற்றிய அர்ச்சனா, அப்படியே கீதா பக்கம் பார்த்து, “கீதா, இந்து எங்கே இருக்கா? அவ
{/f90filter}ரூமுக்கு போய்ட்டாளா?" என்றும் வினவினாள்.
"இல்லை ஆன்ட்டி, தோட்டத்தில கொஞ்சம் நேரம் தனியா இருக்கேன்னு சொன்னா... நான் போய் அவளை வர சொல்றேன்," என்றாள் கீதா.