"இல்ல கீதா, நானே அங்கே போய் பேசுறேன். இந்து கிட்ட நிறைய விஷயம் பேசனும், நீ இங்கே உங்க அத்தையை சமாதானப் படுத்து...." என்ற அர்ச்சனா, கண்மணி பக்கம் திரும்பி, புன்னகையுடன்,
"கண்மணி, நீயும் உன் அத்தை கிட்ட வீணா மாதிரியே கோபமா பேசி முடிச்சாச்சா? இனி கீதா கோட்டா மட்டும் தான் பாக்கி," என்றாள்!
கண்மணி விழிக்கவும், அவளின் தோளில் பரிவுடன் தட்டி விட்டு இந்துவை தேடி தோட்டம் நோக்கி சென்றாள் அர்ச்சனா.
🌼🌸❀✿🌷
தோட்டத்தில் விளக்கு வெளிச்சம் இல்லை என்பதை பார்த்து தெரிந்துக் கொண்டு, ஸ்விட்சை தட்டி மின் விளக்கை உயிர் பெற செய்து விட்டு, மகளை தேடி சென்றாள் அர்ச்சனா. தோட்டத்தில் இருந்த ஒரு பெரிய பூவரச மரத்தின் கீழே இருந்த மர பெஞ்சில் அமர்ந்திருந்த இந்துவை பார்த்து விட்டு அருகில் சென்று அமர்ந்தாள்.
விளக்கு உயிர் பெற்ற போதே யாரோ வருவதை உணர்ந்திருந்த இந்து, அம்மா வந்து பக்கத்தில் அமர்ந்தப் பின்னும் கூட எதுவும் சொல்லாமல் வேறு திசையை பார்த்தப்படி இருந்தாள்.
மகளின் கோபம் புரிந்து மீண்டும் அர்ச்சனாவின் முகத்தில் புன்னகை தோன்றியது.
"என்ன, என் செல்லக்குட்டிக்கு இன்னும் கோபம் போல இருக்கு... என்கிட்டேயும் பேச மாட்டீயா என்ன?"
"நான் ஏன் உங்க கிட்ட பேசன
{/f90filter}
ும்? அது தான் அமைதியா இருந்து நான் திட்டு வாங்குவதை கேட்டு ரசிச்சீங்கள்ள, இன்னமும் என்ன?"
கோபத்தில் பேசிய மகளை பார்க்கும் போது அர்ச்சனாவின் கண்ணிற்கு இன்னமும் சிறு