ஒரு விஷயம் தெரியுமா? வீணா எனக்கு ஃபோன் செஞ்சு சஞ்சீவுக்கும் இந்துக்கும் நடுவுல ஏதாவது பிரச்சனையா ஆன்ட்டி உங்களுக்கு தெரியுமான்னு கேட்டா..."
"ஓ," என்றாள் இந்து யோசனையுடன்!
"ம்ம்... அதே தான்! வீணா கிட்ட இப்போதைக்கு இதுல எல்லாம் தலைபோடாம கண்டுக்காம இருக்க சொன்னேன்... கீதாக்கும் கட்டாயம் சந்தேகம் இருக்கனும்... ஏன் அந்த சின்ன பொண்ணு கண்மணி கூட இன்னைக்கு என்ன நடந்திருக்கும்னு கிட்டத்தட்ட கெஸ் செய்துட்டாளே!!"
"அம்மா???"
"என்ன அம்மா? நீயும் சஞ்சீவும் என்ன நினைச்சீங்க? நீங்க இரண்டு பேரும் இப்படி நடிச்சா எங்க யாருக்கும் எதுவும் தெரியாதுன்னா? அதுவும் நடிக்குறதை சரியா நடிச்சாலும் பரவாயில்லையே!"
இந்துவின் முகத்தை பார்த்து விட்டு, சிரிப்புடன் முடித்தாள் அர்ச்சனா.
"உங்களுக்கு எப்போ இருந்து தெரியும்? இல்ல சந்தேகம்?"
"என்னுடைய பிறந்தநாள்ல இருந்து... இந்து, நான் உன் அம்மா! எனக்கு உன்னை பத்தி தெரியாதா? கல்யாணம் ஆகி சில நாளிலேயே என் பிறந்த நாளை மறந்து போறவளா நீ? வீட்டுக்கு வரலை, சரி பரவாயில்லை. நைட் விஷ் செய்யலை, அதுவும் கூட பரவாயில்லை, ஆனால் அன்னைக்கு முழு நாளும் விஷ் செய்யாம இருந்த பாரு, அப்போவே ஏதோ விஷயம்னு புரிஞ்சது..."
{/f90filter}
"ஓ!"
"ஆமாம்... அதுவும் நீயும் சஞ்சீவும் அதிர்ஷ்ட வசமா ஒரே பொய்யா சொல்லி அன்னைக்கு ஒரு லுக் விட்டீங்க பாரு, அப்போதே சந்தேகம் இல்லாமல் ஏதோ சரி இல்லைன்னு புரிஞ்சு