போச்சு..."
இந்து நம்பாமல் பார்க்கவும்,
"என்ன பார்குற? நீயும் சொன்னீயான்னு பார்க்குறதுக்கும், நீயும் அதையே சொன்னீயான்னு பார்க்குறதுக்கும் வித்தியாசம் இல்லையா?" என்றாள் அர்ச்சனா கேலியாக!
இந்து என்ன சொல்வது என்று புரியாமல் அமைதியாக இருந்தாள். அவளுக்காக ஒரு சில கணங்கள் அமைதியாக இருந்த அர்ச்சனா, பின்,
"சரி இந்து, நான் என்ன உன் கிட்ட பேசனும்னு சொன்னேன்னு கேட்க மாட்டீயா?" என்றாள்.
"சொல்லுங்க அம்மா..."
"இந்து, உனக்கும் சஞ்சீவுக்கும் நடுவே என்ன விஷயமோ, அதுல எல்லாம் நீயா சொல்லாம, நான் மூக்கை நுழைக்க மாட்டேன்... ஆனால் யார் மீது தப்பு இருந்தாலும், இரண்டுப் பேருக்குள்ளேயும் அன்பு இருந்தால் அதை விட வேறு எதுவுமே பெரிசில்லை... விட்டுக் கொடுத்து போறதுல தப்பில்லை... உன் மேல தப்பா, சஞ்சீவ் மீதான்னு எனக்கு தெரிய வேண்டாம்... உன்னை பத்தி எனக்கு தெரியும்... சஞ்சீவ் உன் மேலே எவ்வளவு அன்பு வச்சிருக்கான்னும் எனக்கு தெரியும்... இவ்வளவு ஏன், என் பிறந்த நாளுக்கு நீ ஏன் விஷ் செய்யலைன்னு நான் கேட்டப்போ கூட பொய் சொல்லி உனக்காக பேசினானே தவிர, உன்னை பத்தி வேற எதுவும் சொல்லலையே? ஹி லவ்ஸ் யூ வெரி மச் இந்து... உனக்கு அவன் மீதிருக்கும் அன்பை நான் உங்க கல்யாணத்திற்கு முன் நடந்த அந்த சம்பவங்களிலேயே புரிஞ்சுக் கிட்டேன்... சரி, இரண்டு பேருக்கும் அன்பு இருக்கு, அதை இப்படி தனியா மனசுல வச்சிருந்து என்ன பிரயோஜனம்? அன்பை வெளிப்படுத்தனும் இந்து... இந்த வாழ்க்கை கொஞ்ச நாள் தான்... இருக்கும் நாட்களை விட்டுட்டு அப்புறம் இழந்த நாட்களை நினைச்சு வருத்தப் படுவதால் கிடைப்பது எதுவுமே இல்லை... நீ புத்திசாலி, உனக்கு நான் நிறைய சொல்ல வேண்டியதில்லை... இன்னைக்கு காஞ்சனா கோபமா பேசினப்போ உன் மேல் தப்பில்லைன்ற போதும், அவங்களுக்கு மரியாதை கொடுத்து உன்
{/f90filter}வழக்கமான கோபத்தை காட்டாமல் அமைதியா இருந்த பாரு, அப்போதே, உனக்கு பொறுப்புணர்ச்சியும் வந்தாச்சுன்னு எனக்கு புரிஞ்சுது... அதே போல் அழுது சீனும் கிரியேட் செய்யாம அழகா ஹேண்டில் செய்த பாரு,