"சரி, சரி இதை மிஸ் செய்துட்டோம்ன்னு ஃபீல் செய்யாதே கண்ணா! சஞ்சீவ் இஸ் வெரி டாலென்ட்டட்... இன்னும் நிறைய சாதிப்பான்..." என்றாள்.
"சாதிப்பார் சாதிப்பார்... ஆனால் அது என்ன இப்படி சஞ்சீவை அவன் இவன்னு சொல்றீங்க?"
"அடடா, என் செல்லத்துக்கு இதுக்கெல்லாம் வர கோபத்தை பாரு... உன் சஞ்சீவ் தான் இப்படி தான் கூப்பிடனும்னு அடம் பிடிச்சு கூப்பிட வச்சான்... அவன் ரொம்ப நல்லவன் தான் இந்து... இன்னைக்கு நடந்தது பத்தி ஓரளவுக்கு எனக்கு புரியுது. போனால் போகுது ஒரே ஒரு தடவை விட்டுப் பிடி..."
"ஹுஹும்ம்ம்... பார்ப்போம் அம்மா...."
"சரி சரி, இன்னைக்கு இவ்வளவு அட்வைஸ் உனக்கு போதும்... சீக்கிரமா உங்களுக்குள்ளே எல்லாம் சரி செய்து, நல்ல செய்தி சொல்லனும் சரியா?"
அவ்வளவு பெரிய விஷயத்தை, எந்த அலட்டலும் இல்லது இவ்வளவு ஈசியாக கையாண்ட அர்ச்சனாவின் மேல் அன்பு பெருக, அம்மாவின் தோளில் குழந்தை போல தலை சாய்த்து ஒட்டிக் கொண்டாள் இந்து!
மகளின் தலையை பரிவுடன் வருடிய அர்ச்சனா, "உனக்கு பசிக்குமே கண்ணா, வா, முதல்ல சாப்பிடு, வா..." என்றாள் அன்புடன்.
மறுபேச்சு பேசாமல் இந்து எழுந்துக் கொள்ளவும், அர்ச்சனாவும் இந்துவும் ஒன்றாக வீட்டினுள் சென்றார்கள். அங்கே யாரையும் காணாமல்,
"கீதா அக்கா, கண்மணி எல்லாம் தூங்க போயாச்சா? என்னை பத்தி கவலையே இல்லை போலும்," என குழந்தையாக சிணு
{/f90filter}
ங்கினாள் இந்து!
"அப்படி இல்லடா, மாடில காஞ்சனா கிட்ட பேசிட்டு இருப்பாங்க... நான் தான் அவங்களை அங்கே இருக்க சொன்னேன்... காஞ்சனா உன் கிட்ட கோபமா பேசிட்டோம்னு வருத்தப்