(Reading time: 8 - 15 minutes)
Rojavai thalattum thendral
Rojavai thalattum thendral

தியாகு அவளை தேற்ற முயன்றான்! அவனுக்காக வருத்தத்தை மறைத்துக் கொண்டாலும் மனசுக்குள் அவளுக்கு ஏமாற்றம் இருந்துக் கொண்டே தான் இருந்தது! அதை புரிந்துக் கொண்டு எப்படியோ அவளுக்காக டிக்கெட் வாங்கி இருக்கிறான் அவளின் கணவன்.

   

“எப்படி ராஜ் வாங்குனீங்க???”

   

கிருத்திகாவின் குரலில் நிறைந்திருந்த மகிழ்ச்சியும், காதலும் தியாகுவின் முகத்தில் புன்னகையை வர வைத்திருக்க வேண்டும்!

   

“என் கீர்த்தி ஆசைப் படும் போது அதை நான் வாங்காம விட்ருவேனா? ஸ்பெஷல் விஐபி டிக்கெட்ஸ் டார்லிங்!” என்ற அவனின் குரலிலும் அது கலந்திருந்தது!

   

“தேங்க்ஸ் ராஜ்!”

   

“ஹுஹும் கீர்த்தி!”

   

ராஜின் குரலில் கலந்திருந்த குறும்பை உணர்ந்தவளாய், “ஓகே, ஓகே! உங்களுக்கு தான் இந்த நோ நான்சென்ஸ் வெஜ் தேங்க்ஸ் பிடிக்காதே! உங்களுக்கு பிடிச்ச நான்-வெஜ் தேங்க்ஸ் வீட்டுக்கு வந்ததும் தரேன்,” என்றாள் காதலுடன்!

   

“அப்போ சீக்கிரம் வந்திரு கீர்த்தி! மேட்ச்க்கு போக நாம சீக்கிரம் கிளம்பனும், அதுக்கு முன்னாடி உன்னோட நான்-வெஜ்க்கு டைம் வேணுமே! உனக்காக ரொம்ப ரொம்ப கஷ்டப்பட்டு, கெஞ்சாத குறையா கேட்டு டிக்கெட் வாங்கி இருக்கேன்! ஸ்பெஷல் ஸ்பெஷல் நான் வெஜ் வேணும்!!!”

   

“ஓகே, ஓகே சார். போதும், இது ஆஃபீஸ், நான் அப்புறம் பேசுறேன்!”

   

“மறந்திராதே! லெவன் ட்வெல்வ் போலவே ஆஃபீஸ்ல இருந்து கிளம்பிடு.”

   

“சரிடா, பை!”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.