வேலையை முடிச்சுட்டே கிளம்புறேன்!”
“சாரி கீர்த்ஸ். இது கம்பெனிக்கு இம்பார்டன்ட்.”
“புரியுது! ப்ளஸ் உங்க கமிட்மென்ட் பத்தி எனக்கு நல்லா தெரியும் சுதர்ஷன். நீங்க ஒரு நல்ல பாஸ், உங்களுக்கு சப்போர்ட் செய்ய எனக்கு எப்போவும் ஆர்வம் இருக்கு! நான் இதை முடிச்சு தரேன்!”
சொன்னதோடு நிற்காது தியாகுவிற்கு ஒரு மெசேஜ் அனுப்பி விட்டு மும்முரமாக புதிய வேலையில் ஈடுப்பட தொடங்கினாள் கிருத்திகா.
அரை மணி நேரத்தில் முடித்து விடலாம் என அவள் நினைத்தது, சில பல புள்ளி விபரங்கள் சரி பார்த்து பதில் சொல்ல வேண்டி இருந்ததால் இழுத்துக் கொண்டே போனது!
தியாகு பல தடவை ஃபோன் செய்தான்! முதலில் அழைப்பை ஏற்று ஐந்து நிமிடம், பத்து நிமிடம், அரை மணி நேரம் என்ற கிருத்திகா, பின் வேலையில் ஆழ்ந்துப் போனதால் அவனின் அழைப்பை ஏற்கவே இல்லை!
அவளின் டீம், மற்ற டிபார்ட்மென்ட் என அனைவரின் உதவியோடு அவள் வேலையை முடித்து சுதர்ஷனிடம் கொடுத்த போது மணி மாலை ஆறை நெருங்கி இருந்தது!
தியாகுவை நினைத்து மனசுக்குள் சஞ்சலம் எழுந்தாலும் அவளின் வேலையை முடித்தது நிறைவையும் கொடுத்தது.
வேக வேகமாக காரை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு வந்து சேர்ந்தாள்.
தியாகு கோபமாக இருந்தால் அதை தவறென்று சொல்ல முடியாது! அவளுக்காக அலைந்து திரிந்து டிக்கெட் வாங்கி இருந்தான்! அவனுக்கு ஏமாற்றமாக தானே இருக்கும்... எப்படி அவனை சமாதானப் படுத்துவது??
யோசனையுடன் அவள் அழைப்பு மணியை ஒலிக்க விட்ட அடுத்த வினாடியே கதவு திறந்தது!