(Reading time: 8 - 15 minutes)
Rojavai thalattum thendral
Rojavai thalattum thendral

   

ராஜிடம் பேசி முடித்து சில பல நிமிடங்கள் ஆனப் பிறகும் கிருத்திகாவின் முகத்தில் மலர்ச்சியும், ராஜிடம் பேசியதால் வந்திருந்த புன்னகையும் நிலைத்திருந்தது.

   

ஆபீஸில் மற்றவர்கள் அவளை கவனித்து தங்களுக்குள் பார்த்துக் கொள்வது அவளின் கருத்திலும் பட்டது. ஆனால் அதை அவள் பெரிதாக கண்டுக்கொள்ளவில்லை. புன்னகையுடனே தன் ‘டெரரை’ மெயின்டெயின் செய்தாள்!

   

சுறுசுறுப்பாக அன்றைய முக்கிய வேலைகளை சீக்கிரம் முடிக்க முயன்றாள்.

   

பன்னிரெண்டரை அளவில் எல்லா வேலையையும் முடித்து, தன் செக்ரட்டரியிடம் சில பல வேலைகளை கொடுத்து விட்டு தன் சீட்டில் இருந்து அவள் எழுந்த நேரம், சுதர்ஷன் அவளின் அறைக்குள் வந்தார்.

   

கிருத்திகா கைப்பையுடன் இருப்பதை கவனித்து கேள்வியுடன் பார்த்தார்.

   

அதை உணர்ந்துக் கொண்டு, “ஹலோ சுதர்ஷன், சாரி நான் கிளம்பிட்டு இருந்தேன்! ஏதாவது முக்கியமான வேலையா?” என்றாள் கிருத்திகா அரை மனதுடன்.

   

“ஆமாம் கிருத்திகா! போன வீக் நாம டெமோ கொடுத்த கஸ்டமர் கிட்ட இருந்து லாஸ்ட் மினிட்ஸ் கேள்விங்க வந்திருக்கு. இன்னைக்கே பதில் அனுப்பி ஆகணும். இவங்க நமக்கு ரொம்ப பெரிய கிளையன்ட்!”

    

“ஓ!”

  

“நீ கிளம்ப ரெடியா இருந்தீயே, முக்கியமான விஷயமா?”

   

சில வினாடிகள் நிதானித்து யோசித்த கிருத்திகா, மெல்ல இல்லை என்று தலை அசைத்தாள்.

   

“ஐபிஎல் மேட்ச் பார்க்க போகலாம்னு ப்ளான் வச்சிருந்தோம் சுதர்ஷன். இட்ஸ் ஓகே, இந்த 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.