தியாகுவின் முகம் தெரிந்ததோ இல்லையோ, “சாரி, சாரி ராஜ்! நீங்க எவ்வளவு டிஸ்ஸபாயின்ட் ஆகி இருப்பீங்கன்னு எனக்கு தெரியும். ஃபோன் செய்லாம்னு நினைச்சேன். ஆனா...”
அவளை தொடர்ந்து பேச விடாது அவளின் உதடுகளை தன் உதட்டால் கவ்வி இருந்தான் தியாகராஜன்!
திகைத்துப் போனாலும் கணவனை விட்டு விலக மனம் வராமல் அவனை இறுக அணைத்துக் கொண்டாள் கிருத்திகா.
சில நொடிகளுக்கு பின் அவளின் உதடுகளை விடுதலை செய்தவன், அவளையே பார்த்துக் கொண்டு நின்றான்!
“என்ன ராஜ், லுக் எல்லாம் பலமா இருக்கு???”
“வீட்டுக்கு வெளியே இருந்து ரொமான்ஸ் செஞ்சா உனக்கு பிடிக்காதே... என்ன செய்ய போறேன்னு பார்த்தேன்...”
திறந்திருந்த கதவை சாத்திய கிருத்திகா, “டெக்னிக்கல்லி கதவு தான் திறந்து இருந்துது. நாம வீட்டுக்குள்ளே தான் இருந்தோம்,” என்றாள் கண்களை சிமிட்டி!
தியாகு சிரிக்கவும், அவனின் மார்போடு ஒட்டிக் கொண்டவள், “கோபமில்லையா ராஜ்?” என்றாள் மெல்லியக் குரலில்!
“உனக்கு கிரிக்கெட் எவ்வளவு பிடிக்கும்னு எனக்கு தெரியும் கீர்த்தி. அதும் இந்த மேட்சை நேருல பார்க்க எவ்வளவு ஆசைப்பட்டேன்னும் தெரியும்! அதும் என்னோட பக்கத்துல இருந்து பார்க்குற சான்ஸ் வேற.... இவ்வளவு இருந்தும் நீ லேட்டா வந்தா கட்டாயம் ரீசன் இருக்கும்னு தெரியும்... அதான் இங்கே வீட்டிலேயே எல்லாம செட் செஞ்சு வச்சுட்டேன். உனக்காக பிரியாணி, ஐஸ்க்ரீம், பாப்கார்ன் எல்லாம் வாங்கி வச்சிருக்கேன்... நாம இங்கேயே பார்த்து