(Reading time: 9 - 18 minutes)
Uyir Ketkum amutham nee...!
Uyir Ketkum amutham nee...!

   

சஞ்சீவ் சொன்ன குட் நைட்டும் காற்றில் கரைந்துப் போனது!

   

சஞ்சீவிற்கு இந்து புரியாத புதிராகவே இருந்தாள். என்ன தான் அவனின் நிபந்தனைகளை கல்யாணத்திற்கு முன் அவள் ஏற்றுக் கொண்டிருந்தாலும், திருமணத்திற்கு பின் அவன் மனதை மாற்ற அவள் முயற்சி செய்வாள் என்று எதிர்பார்த்தான். ஆனால் அவளோ அவனிடம் பேசினாளே தவிர அவனின் மனதை மாற்ற முயற்சி எதையும் எடுத்ததாக தெரியவில்லை. அவனை தவிர வீட்டில் அத்தனை பேருடனும் இனிமையாக பழகினாள், பேசினாள்... ஒருவேளை அவன் மீது அவளுக்கு வெறுப்பு ஏற்பட்டிருக்குமோ?

   

அவனின் மனதில் எழுந்த கேள்வியில், அவன் திடுக்கிட்டுப் போனான். எப்படி இருந்திருக்க வேண்டிய வாழ்வை தேவையே இல்லாமல் குழப்பி எங்கே வந்து நிறுத்தி இருக்கிறான். இந்து அன்று சொன்னதை அப்போதே ஏற்றுக் கொண்டிருந்திருந்தால் பிரச்சனையே இல்லையே (கதையும் அப்போதே சுபமாகி இருக்குமே!!!)!!!

   

 🌼🌸❀✿🌷

   

சஞ்சீவ் குழம்பிக் கொண்டிருக்க, உள்ளே அறையில் இருந்த இந்து, அவளின் ஃபோனில் இருந்த மிஸ்ட் கால்களை நோட்டம் விட்டுக் கொண்டிருந்தாள். கீதா எத்தனை முறை அழைத்திருக்கிறாள் என்பதை கவனித்தவளின் முகத்தில் புன்னகை தோன்றியது. கீதா போல், வீணா போல் தோழிகள் கிடைக்க அவள் அதிர்ஷ்டசாலி தான். அவளின் முகத்தில் ஏற்படும் சின்ன சின்ன மாற்றங்களை கொண்டே அவள் மனதில் ஓடுவதை அவர்களால் புரிந்துக் கொள்ள முடியும்... இதில் எல்லாம் அதிர்ஷ்டம் இருந்து என்ன, அவளின் திருமண வாழ்க்கை தான் அலங்கோலமாக இருக்கிறதே... இந்த எண்ணம் தோன்றிய உடனேயே சில நிமிடங்களுக்கு முன் சஞ்சீவ் சொன்ன ‘சாரி’ நினைவில் வந்தது. அவளின் முகத்தில் புன்னகை தோன்றியது, கூடவே யோசனையும் வந்தது...

   

அவன் மன்னிப்பு கேட்கிறான் என்று மகிழ்ச்சி அடைந்தால்

{/f90filter} அடுத்த வினாடியே அவன் தான் மீண்டும் 'மலை' ஏறி விடுவானே! சஞ்சீவை முதல் முதல் சந்தித்ததில் துவங்கி, ஒவ்வொரு சந்திப்பையும், பேச்சையும் மனதில் ரீவைன்ட் செய்து ஒட்டியவள், பழைய மகிழ்ச்சியான 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.