(Reading time: 9 - 18 minutes)
Uyir Ketkum amutham nee...!
Uyir Ketkum amutham nee...!

   

வீட்டில் விளையாட்டு பிள்ளையாக இருந்த போதும், சஞ்சீவ் வெளியில், அவனின் நண்பர்கள் மற்றும் தோழிகளுக்கு எத்தனையோ உதவிகள் செய்திருக்கிறான்... இதை எல்லாம் அவனிடமே சொல்லி பாராட்ட வேண்டும்... அதற்கு அவர்களுக்குள் எல்லாம் சரியாக வேண்டும், அது எப்படி? 

   

எதை எதையோ எண்ணியபடி அந்த டைரியை புரட்டியவளின் கண்களில் அந்த வரிகள் பட்டன... மீண்டும் அதையே பார்த்தவளின் கண்கள் மலர்ந்தன... மனதில் இருந்த கேள்விக்கு பதில் கிடைத்து விட்டதாக தோன்றியது!

   

சஞ்சீவும், இந்துவும், ஒவ்வொரு அறையில் இருந்தப் படி, தன் அருகில் இல்லாத வாழ்க்கை துணையை எண்ணியப்படியே அந்த இரவை தூங்காமல் கழித்தார்கள்!

   

 🌼🌸❀✿🌷

   

வழக்கம் போலவே இரண்டு நாட்கள் செல்ல, அன்று மாலை தாமதமாக வீடு திரும்பிய சஞ்சீவ், வீட்டில் ஹாலில் இருந்து வந்த சிரிப்புடன் கூடிய அரட்டை சத்தத்தை கேட்டு உடனே உள்ளே செல்லாமல் நின்றான். உள்ளே சென்றால் என்ன நடக்கும் என்பது தான் அவனுக்கு தெரியுமே, இந்து முகத்தில் இருக்கும் சிரிப்பு காணாமல் போகும், ஏதேனும் காரணம் சொல்லி அவள் அங்கே இருந்து நகர்ந்து சென்று விடுவாள்!

   

"அத்தை, ராஜீவ் சொல்றதை நம்பாதீங்க, கீதா அக்கா இவர் பக்கம் கூட பார்க்கவே மாட்டாங்க, இவர் தான் சும்மா ஏதேதோ காரணம் சொல்லி எங்க செட் பக்கம் வருவார்... சரி பார்த்தால் பாவமா இருக்கேன்னு நானும் வீணாவும் இவருக்கு சப்போர்ட் செய்தோமா, கீதா அக்கா அவர் பக்கம் பார்க்கவாவது செய்தாங்க... இல்லைனா, அய்யா தேவதாஸ் தான்..."

{/f90filter}   

"யார் நானா தேவதாஸ்? அப்படி ஏதாவது நடந்திருந்தா இந்நேரம் வேற ஒரு ப்யூட்டி க்வீனை கல்யாணம் செய்திருப்பேனே?"

   

ராஜீவ் சொன்னதைக் கேட்டு கீதா அவனை முறைக்கவும்,

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.