(Reading time: 9 - 18 minutes)
Uyir Ketkum amutham nee...!
Uyir Ketkum amutham nee...!

நாட்களின் நினைவில், புன்னகையோடு டைரியை கையில் எடுத்தாள். அவளுக்கு பொதுவாக தினமும் டைரி எழுதும் பழக்கம் எல்லாம் இல்லை. மனதில் கவலையோ, மகிழ்ச்சியோ அளவுக்கு அதிகமாக இருக்கும் போது, உடனே அதை பகிர்ந்துக் கொள்ள யாரும் இல்லை என்றால் எழுதுவது தான்...

   

சஞ்சீவை சந்தித்த நாளில் இருந்து பல பக்கங்கள் அந்த டைரியில் அவளின் அழகிய கையெழுத்தில் நிரம்பி இருந்தது! இப்போது எதையும் அவளின் நெருங்கிய தோழிகளிடமோ, அம்மாவிடமோ பகிர்ந்துக் கொள்ள முடியாததால், கிட்டத்தட்ட எல்லா நாட்களும் அதில் அவளின் மனதில் தோன்றுவதை எழுதுவது வாடிக்கையாக இருந்தது. ஏனோ அவளுக்கு அன்றைய நிகழ்வுகளை எழுத மனம் வரவில்லை... சஞ்சீவின் 'வில்லத்தனமான' செய்கையால் நடந்தவற்றை நினைப்பதை விட, அன்று முழுவதும் ரஞ்சனி மூலம் அவனை பற்றி அறிந்துக் கொண்டிருந்த விஷயங்கள் அவள் மனதில் நிறைந்திருந்தது.

   

கல்லூரி நாட்களில் சஞ்சீவ் செய்த குறும்புகளையும், அடாவடித்தனங்களையும் ரஞ்சனி சொன்ன போது, வாய் பிளந்துக் கேட்டுக் கொண்டிருந்தாள் அவள்!  இப்போது அதை எல்லாம் நினைவில் கொண்டு வரும் போதும் கூட அவளுக்கு ஆச்சர்யமாக தான் இருந்தது... கூடவே நாள் முழுவதும் அலைந்த களைப்பும், இரவில் நடந்த கலாட்டாவினால் ஏற்பட்ட சோர்வும் கூட காணாமல் போனது....

   

சஞ்சீவுடன் அவளுக்கு எல்லாம் சரியான பிறகு... முதலில் அவனிடம் கேட்க வேண்டிய கேள்வி ஒன்று அவளுக்கு இருந்தது... அதன் பிறகு அவனிடம் பேச வேண்டிய விஷயங்களும் நிறைய இருந்தன... அவனின் சின்ன சின்ன ரசனைகள் முதல் பெரிய பெரிய கனவுகள் வரை அனைத்தையும் அறிந்துக் கொள்ள அவளுக்கு ஆர்வமாக இருந்தது... அவனை விட்டு இப்படி விலகி இருப்பது கடினமாக இருந்தது... இப்போதே வெளியில் சென்று அவனை இறுக அணைத்தால் என்ன செய்வான்? 

   

அவளின் எண்ணம் போகும் போக்கை உணர்ந்து அவளுக்கே வெட்கமாக இருந்தது... சரியான பைத்தியம் தான் பிடித்திருக்கிறது.... இன்று அவன் ச

{/f90filter}ெய்ததற்கு கோபம் வர வேண்டாமா? ஹுஹும்ம்ம்... என்ன முயன்றும் அவளால் அவன் மேல் கோபம் கொள்ள இயலவில்லை... அதற்கு முக்கிய காரணம், அன்று ரஞ்சனி மூலம் அவனை பற்றி அறிந்திருந்த நல்ல விஷயங்கள்....

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.