ஒற்றுமையா இருக்குறதும், கண்மணி அவங்களோடு ராசியா போவதும், எல்லாம் நல்ல படியா நடக்கும் போது, மறக்காமல் கடவுளுக்கு நன்றி சொல்லி, இதே போல எப்போதும் இருக்கனும்னு கேட்கனும், அப்புறம் தெய்வம் கோவிச்சு..."
அவள் முடிக்கும் முன் குறுக்கிட்டு,
"அம்மா தெரியாம சொல்லிட்டேன், இந்த லெக்சர் கேட்குறதுக்கு பதில் நான் ஊருக்கே வரேன்," என்றான் சஞ்சீவ்.
காஞ்சனா மகிழ்ச்சியோடு புன்னகைக்க, "அத்தை, வியாழன் கிளம்பினால் போதுமா?" என வினவினாள் இந்து.
"ஏன் இந்து? நாளைக்கு புதன், நல்ல நாள்..."
"இல்லை அத்தை, கம்பெனில ஃபங்க்ஷன் இருக்கு... அன்னைக்கு நந்தினி கூட இன்வைட் செய்தாளே..."
"அட மறந்தே போயிட்டேன்... ஆமாம் அதை முடிச்சுட்டு வியாழன் கிளம்புவோம், என்ன கீதா, ராஜீவ், சஞ்சீவ்?"
அனைவரும் சரி என ஏற்றுக் கொள்ளவும், வியாழன் கிளம்புவது என்று முடிவானது.
🌼🌸❀✿🌷
மறுநாள் எஸ்.ஏ இண்டஸ்ட்ரீஸ் விழாவிற்கு, சஞ்சீவே வீட்டிற்கு வந்து கீதா, இந்து, காஞ்சனா, கலா, கண்மணி என அனைவரையும் அழைத்துச் சென்றான். மற்றவர்கள் பேசிக் கொண்டு வர, காரை ஓட்டி
{/f90filter}
ய சஞ்சீவும், முன் சீட்டில் அவனின் அருகில் அமர்ந்திருந்த இந்துவும் அமைதியாக இருந்தார்கள்.
அதை கவனித்து, "என்ன இந்து ஒரே மவுன மொழி?" என்று கீதா கேட்கவும்,