அதற்கு இந்து பதில் சொல்லும் முன், "வேற என்ன அண்ணி, இன்னும் கொஞ்ச நேரத்துல உங்க ஃப்ரென்ட், அன்பு தங்கை இந்துவின் புகழ் பாடுவதை கேட்டு நமக்கு காதுல இருந்து ரத்தம் தான் வர போகுதே, அதுக்கு தான் இப்போ அமைதியா இருக்காங்க," என்றான் சஞ்சீவ்!
சஞ்சீவை திரும்பி ஒரு பார்வை பார்த்தாள் இந்து. மின்னலாக தாக்கிய அந்த பார்வையின் பொருள் விளங்காமல் அவளை பார்த்தான் சஞ்சீவ். அதற்குள் காஞ்சனா வேறு எதுவோ கேட்கவும், காரில் பேச்சின் திசை மாறிப் போனது.
ஆனால் சஞ்சீவின் மனதில் மட்டும் சஞ்சலம் இருந்துக் கொண்டே இருந்தது! மற்ற நேரம் போல் இல்லாமல் இப்போது அவன் நிஜமாகவே கேலியாக தான் சொன்னான். இந்து அதை தவறாக எடுத்துக் கொண்டிருப்பாளோ?
🌼🌸❀✿🌷
எஸ்.ஏ இண்டஸ்ட்ரீஸ் விழா கோலம் கொண்டிருந்தது. திருமணத்திற்கு பின் இந்துவை முதல் முறை அலுவலக வளாகத்தில் பார்த்ததால், அங்கே வேலை செய்பவர்கள் பலரும் மகிழ்ச்சியுடன் வந்து அவளிடம் பேசினார்கள், நலம் விசாரித்தார்கள். ஏற்கனவே அங்கே இருந்த சேகர், நந்தினி, கல்பனா, அர்ச்சனா, வீணா, லக்ஷ்மி, அவினாஷ், ராஜீவுடன், இவர்களும் இணைந்துக் கொண்டார்கள். எப்போதும் போல, இந்து, வீணா, கீதா என்னும் மூவர் கூட்டணியும் ஒன்றாக அமர்ந்து தங்களின் வழக்கமான பேச்சுக்களை பேசிக் கொண்டிருந்தனர்.
முதல், முதல் இந்துவுடன் உள்ளே நுழைந்த அந்த ஆடிட்டோரியத்தில் அமர்ந்தப் படி, அன்று இந்து சொன்னவற்றை நினைவில் கொண்டு வர முயன்றான் சஞ்சீவ். அன்று அலங்காரங்கள் பற்றி பேசிய போது அவள் கண்களில் மிதந்த கனவுகளும், ஆர்வமும் அவன் கண் முன் வந்தது... தானாக அவனின் மனதில் குற்ற உணர்ச்சி தோன்றியது!
குறிப்பிட்ட நேரத்தில் விழா தொடங்கியது. மேடையில் விழாவிற்கு தலைமை தாங்க வந்திருந்த புகழ் பெற்ற நீதிபதியின் அருகில் நந்தினியும், அர்ச்சன
{/f90filter}ாவும் மட்டுமே இருந்தனர். சேகர் ராஜீவின் அருகில் கீழேயே அமர்ந்திருந்தான். இந்து ஏன் அங்கே இல்லாமல் கூட்டத்தில் அமர்ந்திருக்கிறாள் என்ற கேள்வி சஞ்சீவின் மனதில் எழுந்தது... ஆனால் யாரிடம்