(Reading time: 8 - 15 minutes)
Uyir Ketkum amutham nee...!
Uyir Ketkum amutham nee...!

வெகு நேரமானது! இந்து அங்கே பணி புரிபவர்களுக்கும் ஃபேவரைட் என்பது எல்லோருக்குமே தெரிந்த விஷயம் தானே! மேடையில் இருந்து அவளைப் பார்த்து புன்னகைத்த நந்தினியை பார்த்து பதிலுக்கு புன்னகை செய்தாள் இந்து!

   

அந்த விஷயம் வெளியாகி, மீண்டும் இயல்பு நிலை வரவும், அடுத்ததாக நிலா எஸ்.ஏ இண்டஸ்ட்ரீஸ் எப்படி படி படியாக வளர்ந்தது என்பதை பற்றி சொன்னாள். சரவணனைப் பற்றி புகழ்ந்தப்படி நிலா பேச்சை தொடங்கவும், இந்துவை பற்றிக் கேட்க ஆர்வத்துடன் காத்திருந்தான் சஞ்சீவ்... ஆனால் நிலாவின் பேச்சில் இந்துவின் பெயர் இடம் பெறவே இல்லை... அர்ச்சனாவை பற்றியும், பின் நந்தினி பற்றியும் மட்டுமே பேசினாள் அவள்.

   

சஞ்சீவ் திகைப்புடன் இந்து பக்கம் பார்க்க, அவள் முகத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் நிலாவின் பேச்சை உன்னிப்பாக கேட்டப்படி அமர்ந்திருந்தாள். நிலாவின் பேச்சு முடிந்த பின், நிகழ்ச்சி முடிந்து பஃப்பே முறை உணவு பரிமாற்றம் தொடங்கியது. சஞ்சீவைப் போலவே கோபத்தில் இருந்த கீதாவும், வீணாவும், இந்துவிடம் எதையோ கேட்டு விட்டு, அவள் சரியாக பதில் சொல்லாததால், நேராக நிலாவை தேடி சென்றனர். அங்கே அவர்களுக்கு முன் நந்தினி நிலாவிடம் கோபமாக பேசிக் கொண்டிருந்தாள். கோபமாக வந்த கீதா மற்றும் வீணாவைப் பார்த்து சில வினாடிகள் தயங்கிய நிலா,

   

"சாரி, நான் என்ன செய்ய, இந்து மேடம் தான் அப்படி மாத்த சொன்னாங்க... அவங்க பேர் இருக்க இடத்துல எல்லாம் அர்ச்சனா மேடம் பேரு போட சொன்னாங்க," என்றாள்.

   

வீணாவும், கீதாவும் குழப்பத்துடன் மீண்டும் இந்துவை தேடிச் சென்றார்கள். அதே நேரம், ஆடிட்டோரியத்தை ஒட்டி இருந்த அறையின் உள்ளே இந்துவும் சஞ்சீவும் பேசிக் கொண்டிருந்தார்கள்.

   

"ஏன

{/f90filter}் இந்து இப்படி? நீ சொல்லாம இது நடந்திருக்காது..."

   

சஞ்சீவை நேராக பார்த்த இந்து,

   

"உங்க காது வழியா ரத்தம் வராமல் தடுக்க தான்," என்றாள்!

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.