கேட்பது?
இறை வணக்கத்துடன் தொடங்கிய நிகழ்ச்சி, நந்தினியின் உரை மற்றும், விழா தலைவரின் உரை என்று தொடர்ந்தது... பின் மீண்டும் பேசிய நந்தினி,
"சில்வர் ஜூப்லி என்பது சின்ன விஷயம் இல்லை... நாம் அனைவரும் மகிழ்ச்சியோடு கொண்டாட வேண்டிய ஒரு நிகழ்ச்சி... ஆனால் இந்த விழாவிற்கு நம் கம்பெனியுடன் தொடர்புடையவர்களை மட்டும் தான் இன்வைட் செய்திருக்கிறேன்... ஏனென்றால் இது ஒரு குடும்பத்தில் நடக்கும் நிகழ்ச்சி... நாம் அனைவரும் எஸ்ஏ குடும்பத்தின் அங்கத்தினர்..."
அனைவரும் மகிழ்ச்சியுடன் கைத்தட்டினர். பின் நந்தினி அங்கே பணி புரிபவர்களுக்கு என பல புது சலுகைகளை அறிவித்தாள். கரகோஷம் நிற்க வெகு நேரம் ஆனது. பின்,
"நீங்கள் அனைவரும் இதை எல்லாம் மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டதில் சந்தோஷம்... இந்த நிறுவனத்தின் தலைவியாக நான் எடுக்கும் கடைசி முடிவு இது தான்... ஏனென்றால், இன்னும் சில நிமிடங்களில் நிறுவனத்தின் தலைமை மாறப் போகிறது," என்றாள்.
அந்த இடத்தில் ஒரு சில வினாடிகள் அமைதியும், பின் சலசல வென ஒருவருக்கொருவர் பேசும் சத்தமும் கேட்டது...
"உங்களுக்கு எல்லாம் அதிர்ச்சி என்று புரிகிறது, ஆனால் பயப் படாதீங்க. நான் சொல்ல போகும் விஷயத்தை கேட்டா ரொம்ப சந்தோஷப் படுவீங்க... உங்களுக்கு தெரியும் என்னுடைய சித்தி அர்ச்சனா அவர்கள் இந்த நிறுவனத்தை திறம்பட கவனித்து வந்தார்... அவரின் சார்பாக கம்பெனி பொறுப்பை கவனித்த இந்துவும் நம் கம்பெனியின் முன்னேற்றத்திற்காக உழைத்தார்... ஆனால், திடீரென நானும் என் அம்மாவும் வந்து கம்பெனியின் முழு பொறுப்பையும் எடுத்துக் கொள்வது எங்களுக்கு சரியென படவில்லை... எனவே, எங்களிடம் இருக்கும் 75% பங்குகளை நான்காக பிரித்து, 19% சதவிகிதத்தை நான் எடுத்துக் கொண்டு மீதி 56% சதவிகித பங்குகளையும் இ
{/f90filter}ந்துவிற்கே கொடுத்து, மீண்டும் இந்துவையே இந்த கம்பெனியின் எம்.டி யாக அறிவிக்கிறேன்."
இந்து ஆச்சர்யத்தில் அமர்ந்திருக்க, மெதுவாக ஒலிக்கத் தொடங்கிய கைதட்டல் ஒலி அடங்க