(Reading time: 8 - 16 minutes)
Uyir Ketkum amutham nee...!
Uyir Ketkum amutham nee...!

அடைந்தப் போது, இருட்டி விட்டிருந்தது. ராமமூர்த்தியும் அவரின் மனைவி சரஸ்வதியும் அவர்களை அன்புடன் வரவேற்றார்கள். கண்மணி பல நாட்கள் கழித்து பெற்றோரை பார்த்த சந்தோஷத்தில் ஓடி சென்று அவர்களை அணைத்துக் கொண்டாள். ஒரு சில வினாடிகள் அவர்களிடம் பேசி செல்லம் கொஞ்சியவள், பின் வீட்டிற்கு வந்திருக்கும் உறவினரை வரவேற்பதில் பெற்றோருடன் கலந்துக் கொண்டாள். புதியவர்களை பெற்றவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தவள், ஒவ்வொருத்தருக்கும் ஒதுக்கி இருக்கும் அறையை தன் அம்மாவிடம் கேட்டு சொன்னாள்.

   

கிட்டத்தட்ட அரண்மனை போன்று இருந்த அந்த வீட்டை பார்த்து புதிதாக வந்திருந்த இந்து, அர்ச்சனா, லக்ஷ்மி, வீணா, அவினாஷ் அனைவரும் அசந்துப் போனார்கள்.

   

“இது பல தலைமுறையா எங்க குடும்பத்துல இருக்க பரம்பரை வீடு. இந்த ஊர்ல ஜமின்தார் மாதிரியான குடும்பம் எங்களுடையது...” என்று விளக்கினாள் காஞ்சனா.

   

“அட ஆன்ட்டி, அப்போ நீங்க தான் பெரிய பண்ணை வீட்டுப் பொண்ணா? இவங்க இரண்டு பேரும் பண்ணையார் குடும்ப மருமகள்களா? சூப்பர்...” என்றாள் வீணா.

   

“நீயும் கூட எங்க குடும்பத்து பொண்ணு தான் வீணா...”

   

“ஆன்ட்டி, இப்படி எல்லாம் அவக் கிட்ட சொல்லாதீங்க, அப்புறம் எனக்கும் சொத்து கொடுங்கன்னு கேட்டாலும் கேட்பா... எதுக்கு இந்த ரிஸ்க் எல்லாம்?” என்றான் அவினாஷ் கிண்டலாக.

   

“ஹலோ!!! நான் என்னமோ சொத்துக்கு அலையுற மாதிரி ஏன் என் இமேஜை இப்படி பப்ளிக்கா ஸ்பாயில் செய்றீங்க? உங்களை கவனிச்சுக்கிறேன் இருங்க.... நான் போய் தூங்கப் போறேன்... எல்லோருக்கும் பை குட் நைட்,” என்ற வீணா, கணவனை ஒரு முறை முறைத்து விட்டு, ரோஷினியுடன் கண்மணி

{/f90filter} சொன்ன அறையின் பக்கம் சென்றாள்.

   

நெடுந்தூரம் பயணம் செய்த அலுப்பில் அனைவரும் உணவு உண்ணாமல் தூங்க செல்லவும், கண்மணி இந்துவின் அருகில் வந்து கிசுகிசுத்தாள்.

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.