(Reading time: 8 - 16 minutes)
Uyir Ketkum amutham nee...!
Uyir Ketkum amutham nee...!

“ஆமாம்... அப்போ நான் வேணா இங்கேயே தூங்கட்டுமா?”

   

இந்து விழிகளை விரித்து அவனைப் பார்த்தாள்!!! எப்போதும் போல அவளின் விழிகள் அவனை ஈர்க்கவும், அவள் பக்கம் செல்ல நினைத்து ஓரடி எடுத்தான் சஞ்சீவ். இந்து அவசரமாக நின்றிருந்த இடத்தில் இருந்து ஒன்றும் சொல்லாமல் நகர்ந்து செல்லவும், சஞ்சீவ் தன்னை தானே கட்டுப்படுத்திக் கொண்டான்.

   

‘சஞ்சீவ், இந்த பிரச்சனையை ஆரம்பித்து வச்சவன் நீ.... இதை நல்ல விதமா, இந்துவோட மனசு வருத்தப் படாமல் முடிச்சு வைக்க வேண்டியதும் நீ தான்...’ என மனதுள் சொல்லிக் கொண்டான்.

   

தன் பெட்டியில் எதையோ தேடுவதைப் போல பாசாங்கு செய்துக் கொண்டிருந்த இந்துவை பார்த்தவனுக்கு சிரிப்பு வந்தது. ஆனால் அதை அடக்கியப் படி,

   

“சரி இந்து, நான் கிளம்புறேன்... இன்னைக்கு ஒரு நாள் இது ஓகே... எல்லா நாளும் நான் இது மாதிரி போக முடியாது... சரி, நாளை விஷயம் நாளைக்கு பார்ப்போம்... குட் நைட்... கதவை லாக் செய்துக்கோ...” என்றான்.

   

சரி என தலை அசைத்த இந்து,

   

“ரொம்ப இருட்டா இருக்கே, நீங்களும் பார்த்து போங்க...முடிஞ்சா உங்க ஃப்ரென்டை வர சொல்லுங்க...” என்றாள்.

   

“சரி... குட் நைட்...”

   

“குட்

{/f90filter}

நைட்...”

   

சஞ்சீவ் படிகளில் இறங்கி செல்வதை பார்த்து விட்டு, கதவை மூடி தாளிட்டாள் இந்து. உடைகளை மாற்றி கட்டிலில் படுத்தாள். அவளின் மனதில் பல எண்ணங்கள் அலை மோதியது... 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.