(Reading time: 8 - 16 minutes)
Uyir Ketkum amutham nee...!
Uyir Ketkum amutham nee...!

“அக்கா, உங்க இரண்டுப் பேருக்கும் நான் அம்மா கிட்ட சொல்லி ரெடி செய்திருக்க ரூம் ரொம்ப ஸ்பெஷல்... நல்லா ஏ.ஸி ரூம் மாதிரி குளுகுளுன்னு இருக்கும்... வலது பக்கம் இருக்க ஜன்னல் திறந்தா பகல் நேரத்துல பச்சை பசலேன்னு சூப்பர் சீனரி தெரியும்... நைட் இன்னொரு பக்கம் ஜன்னல் திறந்தால், வானம் அழகா தெரியும்...”

   

கண்மணி கொடுத்த அவ்வளவு பெரிய ‘ஹைப்’பிற்கு, அமைதியாக தலையாட்டினாள் இந்து. அவளின் மனதில் வேறு சில கேள்விகள் ஓடிக் கொண்டிருந்தது! திருமணத்திற்குப் பிறகு இது வரையில் அவளும் சஞ்சீவும் ஒரே அறையில் தனியாக தங்கியதில்லை. வீட்டில் இருவரும் தனி தனி பகுதியில் தங்கி இருந்தார்கள். திருமணம் முடிந்து இந்துவின் வீட்டிற்கு சென்ற போதும் அங்கே இரவு அவர்கள் தங்கவில்லை! ஊரில் தங்கப் போகும் இந்த சில நாட்கள் சஞ்சீவுடன், அதுவும் இப்படி ஒரு விதமாக பார்க்கும் சஞ்சீவுடன் எப்படி தங்குவது?

   

அவனுக்கு என்ன தான் ஆகி விட்டது? திடீரென்று எதனால் அவனிடம் இந்த மாற்றம்? இது நிஜமான மாற்றமா அல்லது அவளுக்கு அப்படி தோன்றுகிறதா??

   

மனதில் யோசனையுடன் கண்மணியின் பின்னே சென்ற இந்து, அந்த அறைக்கு சென்று சேரும் முன்பே சஞ்சீவ் அங்கே வந்து சேர்ந்திருந்தான். சாத்தி வைத்திருந்த அறையில் வெளி காற்று வர ஜன்னலை திறந்து வைத்துக் கொண்டிருந்தவன், கண்மணியின் பின்னே வந்த இந்துவை பார்த்தான்! அவளின் மனதில் இருக்கும் கேள்விகளை புரிந்துக் கொண்டதைப் போல் அவன் கண்களில் சிரிப்பு பளிச்சிட்டது. அவனை முறைத்தப் படி உள்ளே வந்தாள் இந்து.

   

“சரி அக்கா, ரொம்ப டையர்டா இருப்பீங்க, தூங்கி ரெஸ்ட் எடுங்க, காலையில் பார்ப்போம்... இதுக்கு மேல இருந்தா அத்தான் திட்டுவார்...” என்று சொல்லிவிட்டு கண்மணி அங்கிருந்து சென்றாள்.

   

இந்து அறையை சுற்றி நோட்டம் விட்டாள். அந்த அறை கண்மணி சொன்னது போல அருமையாக இருந்தது. சஞ்சீவ் திறந்து விட்டிருந்த ஜன்னலில் தெரிந்த நிலவும், பூக்களின் வாசனையும் மனதை அள்ளியது. அவர்கள் இருவரைப்

{/f90filter}போல இல்லாமல், சாதாரணமான தம்பதிகள் அங்கே தங்கி இருந்தால், நேரம் இனிமையாக தான் கழிந்திருக்கும். பார்வையை அடுத்த பக்கம் திருப்பியவள், அங்கே இருந்த கட்டிலைப் பார்த்தாள். பெரிதாக இல்லாமல், 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.