(Reading time: 8 - 16 minutes)
Uyir Ketkum amutham nee...!
Uyir Ketkum amutham nee...!

இருவர் படுக்கும் அளவில் தான் இருந்தது. இதில் கதைகளில் வருவது போல் ஓரமாக படுப்பது எல்லாம் கூட முடியாது போல் இருக்கிறதே...

   

“இந்து, நான் உன் கிட்ட கொஞ்சம் பேசனும்... நீ டையர்டா இல்லன்னா....” என்று இழுத்தான் சஞ்சீவ்.

   

“எனக்கு தூக்கம் வருது... நாளைக்கு காலையில வேற சீக்கிரம் எழுந்திருக்கனும்....” என்றாள் இந்து அவசரமாக.

   

முழுக்க முழுக்க பொய் தான்... சில மணி நேரம் காரை ஒட்டி வந்த சஞ்சீவை விட அவளுக்கு ஒன்றும் பெரிதாக ஒய்வு தேவை இல்லை... ஆனால் அவன் பேச போவது பற்றி அவளுக்கு ஒரு ஊகம் இருந்தது... அதில் இருந்து தப்பிக்க தான் பொய் சொன்னாள்...

   

அவன் பேச விரும்புவதைப் பேச இப்போது சரியான நேரம் இல்லை என்பது அவளுடைய எண்ணம்!

   

இந்துவை ஊடுருவுவது போல் ஒரு பார்வை பார்த்த சஞ்சீவ், அதற்கு மேல் அவளை வற்புறுத்தவில்லை.

   

“சரி, நீ இங்கே படுத்து தூங்கிக்கோ...” என்று மட்டும் சொன்னான்.

   

சொன்னதோடு நிறுத்தாமல், அவன் வெளியில் செல்வதற்கான அறிகுறியாக பெட்டியில் இருந்து டார்ச் லைட்டை கையில் அவன் எடுக்கவும்,

   

“நீங்க தூங்கலையா?” எனக் கேட்டாள் இந்து.

   

“தூங்காமல் என்ன? தூங்க தான் ப

{/f90filter}

ோறேன்.. என் ஃப்ரென்ட் நந்தகோபால் வீடு பக்கத்துல தான் இருக்கு, அவன் கிட்ட வரேன்னு சொல்லி இருந்தேன்... காலையில் வந்திருவேன்...”

   

“ரொம்ப இருட்டா இருக்கே...”

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.