(Reading time: 8 - 15 minutes)
Uyir Ketkum amutham nee...!
Uyir Ketkum amutham nee...!

திரும்ப தலைப் போடுறது சரி இல்லை...”

   

“ஆனாலும்...”

   

“ஹு ஹு ம்ம்.. இல்லாத மூளையை ரொம்ப வேலை செய்ய வைக்காமல் ரோஷினிக்கு ஊட்டி விட்டுட்டு வா, நாம சாப்பிடலாம். எனக்கு பசிக்குது.... நான் போய் எல்லோரையும் கூப்பிட்டுட்டு வரேன்,” என்று சொல்லி விட்டு சென்றாள் கீதா.

   

 🌼🌸❀✿🌷

   

அதன் பிறகு அன்று நேரம் இறக்கைக் கட்டிக் கொண்டு பறந்தது. வயல்வெளி அருகில் இருந்த பம்ப்செட்டில் நேரம் போவது தெரியாமல் குளித்து, அருகில் இருந்த தோட்டத்தில் தென்பட்ட பழங்களை சாப்பிட்டு ருசித்து, பச்சை பசலேன கண்ணிற்கு குளிர்ச்சியாக இருந்த எழிலை ரசித்து அனைவரும் நேரத்தை ஒட்டினார்கள். 

   

மதிய உணவிற்கு பிறகு பெரியவர்கள் ஒரு பக்கம் அமர்ந்து பேச, இளைய தலைமுறையினர் இன்னொரு பக்கம் அமர்ந்து கதை பேசினார்கள். சஞ்சீவ் அவன் நண்பன் நந்தகோபாலுடன் பேசிக் கொண்டிருப்பதை கவனித்தாள் கீதா. காலையில் வீணா சொன்னது அவளின் நினைவில் வந்தது... அப்படி என்ன தான் காலையில் இருந்து இரண்டுப் பேரும் பேசுகிறார்கள் என கீதா நினைக்கும் போதே, சஞ்சீவின் பார்வை அவளிருந்த பக்கம் வருவதை உணர்ந்தாள். அவன் இங்கே யாரை பார்க்கிறான் என்பதை அந்த பக்கம் திரும்பி பார்த்து தெரிந்துக் கொள்ள வேண்டிய அவசியம் கீதாவிற்கு ஏற்படவில்லை...!!! அவளுக்கு தான் இந்து எங்கே இருக்கிறாள் என்பது தெரியுமே!!!!

   

ஓஹோ! அப்படியா விஷயம்! இது தான் சஞ்சீவ், காலையில் இருந்து நந்தகோபாலை பிடித்து வைத்திருக்கும் ரகசியமா என மனதில் சிரித்தப் படி, வீணா பக்கம் திரும்பினாள் கீதா. சஞ்சீவ் பக்கம் யோசனையுடன் பார்த்துக் கொ

{/f90filter}ண்டிருந்த வீணாவும் கீதா பக்கம் திரும்பினாள். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து புரிந்துக் கொண்ட புன்னகையை பகிர்ந்துக் கொண்டார்கள்.

   

கதை பேசி பேசி அலுத்துப் போன கண்மணி,

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.