(Reading time: 8 - 15 minutes)
Uyir Ketkum amutham nee...!
Uyir Ketkum amutham nee...!

கூறாதோ நான் படும் பாடுகள் நூறு

நானொரு ஆண்டாளோ திருப்பாவை பாட

ஏழையை விடலாமா இது போல வாட

வெள்ளி நிற வெண்ணிலவில் வெண்குழலில் இசையும் வரும்

நள்ளிரவில் மெல்லிசையில் தேன் அலைகள் நினைவில் எழும்

ஓர் இதயம் உன்னால் இளகும் இந்நேரத்தில் கண்ணா உன் மௌனத்தை தவிர்த்து

   

சொல்லாயோ வாய் திறந்து வார்த்தை ஒன்று சொல்லாயோ வாய் திறந்து

நில்லாயோ நேரில் வந்து நான் அழைக்க நில்லாயோ நேரில் வந்து

ஊஞ்சல் மனம் அன்றாடம் உன்னோடு மன்றாடும் வேளை

   

பாடியப் படி கண்ணை திறந்த இந்து, எதிரில் அவளையே பார்த்தப் படி நின்றிருந்த சஞ்சீவை பார்த்து பாட்டை நிறுத்தினாள். அவளையே பார்த்தபடி இருந்த மற்றவர்களும் இவ்வுலகத்திற்கு வந்து சேர்ந்தார்கள்.

   

“வாவ் அக்கா! ஜானகி வாய்ஸ் போலவே, என்ன உருக்கமா பாடுறீங்க....”

   

“ரொம்ப நல்லா பாடுறீங்க!”

   

மற்றவர்களின் பாராட்டை தலை அசைத்து ரெடிமேட் புன்னகையுடன் ஏற்றுக் கொண்ட இந்து, தயக்கத்துடன் தோழிகளை பார்த்தாள். அவர்கள் இருவர் முகத்தில் இருந்த கேள்வியை பார்த்து விட்டு எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தாள்.

   

 🌼🌸❀✿🌷

   

நேரம் மெதுவாக நகர்ந்தது. அடுத்த நாள் கோவிலுக்கு எடுத்து செல்வதற்காக தோட்டத்தில் இருந்து பூ பறித்து வந்து, பூ கட்ட தெரிந்த பெண்கள் கட்ட து

{/f90filter}

வங்கினர். சென்னையிலேயே பிறந்து வளர்ந்திருந்தவர்களுக்கு, இங்கே இப்படி உறவினர் அனைவரும் ஒன்றாக அனைத்து வேலைகளையும் பங்கு போட்டுக் கொண்டு செய்வதை பார்த்து ஆச்சர்யமாக இருந்தது.

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.