“ரொம்ப போர் அடிக்குது.... யாராவது ஒரு பாட்டு பாடுங்க பார்ப்போம்...” என்றாள்.
“பாட்டா? ஏன் கண்ணு உனக்கு இப்படி ஒரு ஆசை? நான் பாடினால் அப்புறம் உன்னுடைய பழைய ஃப்ரென்ட்ஸ் எல்லோரும் வந்திருவாங்க,” என்றாள் அவளின் உறவு பெண்.
“கண்மணி, உன்னோட பழைய ஃப்ரென்ட்ஸ் எல்லாம் கழுதைனா, புது ஃப்ரென்ட்ஸ் எல்லாம் யாரு?”
“வீணா அக்கா!!”
“சரி, சரி, இந்து இருக்கும் போது வேற யாரை பாட சொல்றது... பாடு, இந்து பாடு... உன் இசை என்னும் இன்ப வெள்ளத்தில் நீச்சல் அடித்து எத்தனை வருடங்கள் ஆகி விட்டது,” என்றாள் வீணா.
“நீங்க பாடவும் செய்வீங்களா?” என்றாள் கண்மணி ஆச்சர்யத்துடன்.
“ப்ச்... அப்படி ஸ்பெஷலா எல்லாம் இல்லை கண்மணி, சும்மா வீட்டுல பாடுறது தான்...” என்றாள் இந்து சங்கோஜத்துடன்.
“இல்லை கண்மணி, முன்னாடி எல்லாம் ஸ்கூல்ல பிரேயர் சாங் கூட பாடுவா... எங்களால கேட்க தான் முடியாது...” என்றாள் வீணா கிண்டலாக.
“இதுக்காகவே நீங்க பாடனும் இந்துக்கா, நாங்களும் கேட்க முடியுதா இல்லையான்னு தெரிஞ்சுப்போம்ல?”
{/f90filter}
அவர்கள் மேலும் வற்புறுத்தவும், இந்து மனதில் ஒலித்துக் கொண்டிருந்த பாடலை கண்களை மூடி மெல்லிய குரலில் பாட துவங்கினாள்.
நாள்தோறும் பார்வையில் நான் விடும் தூது