காலேஜில் முதல் ஆண்டு முடித்து இரண்டாம் ஆண்டு சென்ற போது, க்ளாஸ் அல்லது லைப்ரரி என தன் உலகத்தை சுருக்கி கொண்டான் உதய்...
நந்திதாவை சந்தித்து விடக் கூடாது என்பதற்காகவே அந்த ஆண்டு நடைபெற்ற பார்ட்டி, ஃபங்ஷன் எதிலுமே அவன் கலந்துக் கொள்ளவில்லை... ஃபேர்வெல் பார்ட்டிக்கு கூட செல்லவில்லை...
படிப்பினுள் தன்னை நுழைத்துக் கொண்டான்... ஹுஹும்... நுழைத்துக் கொள்ள முயன்றான்...
கல்லூரி படிப்பை முடித்தப் போது அவனின் மனதை ஓரளவிற்கு கட்டுக்குள் கொண்டு வந்திருந்தாலும், நந்திதாவின் நினைவுகள் மட்டும் நீறு பூத்த நெருப்பாக அவனின் மனதினுள் அப்படியே இருந்தது...
அதில் இருந்து தப்பிக்க என்றே புது கம்பெனி தொடங்க முடிவு செய்தான்!
நான்கு தலைமுறைக்கு தேவையான பணம் இருக்க புது கம்பெனி எதற்கு என்று கேட்ட அம்மாவிடம் அடம் பிடித்து புது நிறுவனத்தை தொடங்கினான்... ராத்திரி பகல் என்று பாராமல் உழைத்தான்... அவனின் நிறுவனமும் வளர்ந்தது...
ஆனால் அவன் விரும்பியது போல் நந்திதாவின் நினைவுகள் அவனை விட்டுப் போகவில்லை... மாறாக வளர்ந்துக் கொண்டே சென்றது...
இது வெறும் கவர்ச்சி இல்லை என்பது உதய்க்கு தெளிவாகப் புரிந்து போனது!
முதல் நாள் நந்திதாவை பார்த்தப்போது அவன் அவளின் அழகில் கவரப் பட்டிருக்கலாம்... ஆனால் அதன் பின் அந்த ஒரு வருடம் அவளை பற்றி அறிந்துக் கொண்டததில் உருவானது தான் இந்த நேசம்... உண்மையான நேசம்...
ஆனால் நந்திதா அவனை விட இரண்டு வயது பெரியவள்...!