“இரண்டுமே இருக்கு உதய். கை கழுவிட்டு வந்து உட்காரு, பரிமாருறேன்...”
சொன்னது போல துளசி பரிமாற, ஆர்வத்துடன் சாப்பிட தொடங்கினான் உதய்.
“என்ன உதய், என்னவோ கேள்வி பட்டேன்,” என்று மெல்ல பேச்சை தொடங்கினாள் துளசி.
“என்ன கேள்விபட்டீங்க அண்ணி?”
“என் ஃப்ரென்ட் நந்து உன் கம்பெனில வேலைக்கு சேர்ந்திருக்காளாமே?”
“நந்துவா?”
“ஆமாம் நந்திதா...”
“ஓ, ஆமாம் பெங்களூரில் இருந்து வராங்க தானே? ரெக்ருட்மென்ட் எல்லாம் நான் டைரக்ட்டா செய்றதில்லை அண்ணி. அதுக்கு தனி டீம் இருக்கு!”
“அப்படியா? நான் வேற கேள்வி பட்டேனே!”
“என்ன கேள்வி பட்டீங்க?”
“சென்னைல இருந்து யாரும் வேண்டாம் பெங்களூர்ல இருந்து தான் ரெக்ருட் செய்யனும்னு நீ சொன்னதா கேள்வி பட்டேனே... அதுவும் ஸ்பெசிஃபிக்கா ஒரு கம்பெனில வேலை செய்றவங்க தான் வேணும்னு சொன்னதா வேற கேள்வி!”
சரத் பக்கம் பார்த்த உதய், இதெல்லாம் உன் வேலையா என பார்வையால் அவனிடம் கேட்டான்.
சரத் அமைதியாக புனனகையுடன் நின்றான்.