டைம்ல நாங்க பர்த்டே அன்ட் ஸ்பெஷல் டேஸ் எல்லாம் ரொம்ப ஸ்பெஷலா ப்ளான் செஞ்சு கலாயிப்போம்ல, அப்போ எல்லாம் கீதா அக்கா என்ன என்ன செய்வாங்க தெரியுமா? நாங்க காலேஜ் செகன்ட் இயர்ல இருந்தப்போ இந்து பர்த்டேக்கு என்ன செஞ்சாங்க தெரியுமா?”
வீணா மேலே பேசாத வண்ணம் அவள் வாயை தன் கையால் மூடிய கீதா,
“இங்கே இந்த வெட்டிப் பேச்சு பேசுறதுக்கு பதில், போய் இந்து ரெடியான்னு கேட்டுட்டு வா. இங்கே எல்லோரும் ரெடியாகி அவளுக்காக காத்திருக்காங்க பார்,” என்றாள்.
வீணா அதற்கு பதில் சொல்ல வாயை அசைக்கும் முன்,
“நான் போய் சொல்றேன்,” என்றான் சஞ்சீவ் அவசரமாக.
அவனை கேலியாக பார்த்தப்போதும் வீணா தடுக்கவில்லை!
அதனால் சஞ்சீவ் வேக நடையுடன் வீட்டின் உள்ளே சென்றான். மாடியை நோக்கி போக இருந்த திருப்பத்தில் திரும்பியவன், எதிரில் வந்த இந்துவை கவனிக்காமல மோதிக் கொண்டான்.
முதலில் இருவருக்குமே ஒன்றும் புரியவில்லை!!!
இந்துவை அவ்வளவு அருகில்... அவன் விரும்பியது போலவே சேலையில் பார்த்த சஞ்சீவ் தடுமாறினான்... அவன் கோபத்தின் உச்சியில் இருந்த நாட்களிலேயே இந்துவின் முகத்தை பார்த்தால் அவனுக்கு எல்லாமே மறந்துப் போகும், இப்போதோ கேட்கவே வேண்டாம்... இந்துவை கண்ணில் பார்க்க என்றே தவமிருந்தவன், அவள் தேவதையாக மெரூன் கலர் பட்டு புடவை
{/f90filter}
யில் வந்து அவன் மேல் பூக்குவியலாக மோதவும், அசந்துப் போனான்! அவனின் கண்கள் இந்துவின் முகத்தை வட்டமிட்டது!
இந்துவின் கன்னங்கள் வெட்கத்தில் சிவந்திருந்தது!