இயல்பாக குனிந்து அவளின் வலது கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட்டான் சஞ்சீவ்.
சஞ்சீவை எதிர்பாராமல் திடீரென்று சந்தித்ததிலேயே தடுமாறி இருந்த இந்து, இப்போது மேலும் தடுமாறினாள்! அவளின் மனதில் இருந்த வைராக்கியம் எல்லாம் இருந்த இடம் தெரியாது காணாமல் போனது!
முத்தமிட்டு விட்டு நிமிர்ந்து இந்துவின் கண்களை சந்தித்த சஞ்சீவ், அவளை இறுக அணைத்துக் கொண்டான். மறுக்காமல் அவனின் மார்பில் முகம் புதைத்தவளின் முகத்தை வேகமாக நிமிர்த்தி அவன் அவளின் உதடுகளை நோக்கி குனியவும்,
“ஓ! சாரி...“ என்ற வீணாவின் குரல் கேட்கவும் சரியாக இருந்தது!
சஞ்சீவும் இந்துவும் அவசர அவசரமாக விலகி நின்றார்கள். வீணாவின் கேலி பார்வையை பார்த்து அசட்டு சிரிப்பொன்றை சிந்திவிட்டு கிளம்பினான் சஞ்சீவ்.
இந்து திகைத்துப் போய் நின்றிருந்தாள்!!! சற்று முன் நடந்ததை அவளால் நம்பவே முடியவில்லை! அவள் போட்டிருந்த (மெகா) திட்டமென்ன? இப்போது அவள் நடந்து கொண்டது என்ன? இந்த மாதிரியான திட்டமெல்லாம் ஏன் அவளுக்கு தோன்றியது? இன்னமும் ஒரே வாரம் தான்... ஆனால் ‘இந்த’ சஞ்சீவை அவளால் சமாளிக்க முடியுமா?
வீணாவின் ‘நான்-ஸ்டாப்’ கிண்டல் எதுவுமே இந்துவின் காதில் விழவே இல்லை. தன் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்ற இன்னும் ஒரு வாரத்தை எப்படி நகர்த்துவது என்ற கவலையில் ஆழ்ந்திருந்தாள்.
தன் நண்பனுடன் காரில் அமர்ந்திருந்த சஞ்சீவின் பார்வை தவிர... வேன் கிளம்பியதோ, மற்றவர்களின் பேச்சோ, எதுவுமே கோவில் வந்து சேரும் வரை இந்துவின் கவனத்தில் படவில்லை. கோவிலில் அம்மனை தரிசித்தவளி
{/f90filter}ன் மனம் ஒருவிதமான நிலைப்பாட்டிற்கு வந்தது. சஞ்சீவின் அருகில் நின்று, அவர்களின் எதிர்காலம் சிறப்பாக அமைய வேண்டியவள், மறக்காமல், மற்றவர்கள் அனைவருக்காகவும் வேண்டிக் கொண்டாள்.