(Reading time: 8 - 16 minutes)
Uyir Ketkum amutham nee...!
Uyir Ketkum amutham nee...!

அவளின் நெற்றியில் குங்குமமிட சஞ்சீவ் நீட்டிய கையை மற்றவர்களின் கவனத்தை கவராமல் தடுத்தவள், அவளே அவன் கையில் இருந்து குங்குமத்தை எடுத்து நெற்றி வகிட்டில் வைத்துக் கொண்டாள். சஞ்சீவின் கண்களில் இருந்த கேள்வி புரிந்தாலும், அவள் கண்டுக்கொள்ளாததை போல் விலகி சென்றாள். 

   

மற்ற பெண்களுடன் சேர்ந்து இந்துவும் பொங்கல் பொங்கும் வேலையில் ஈடுப்படவும், அவினாஷ், ராஜீவ் போல மனைவியின் பக்கத்தில் இருந்து உதவ செய்ய முயற்சி செய்யாமல், தள்ளி நின்று மனைவியை பார்த்தப் படி இருந்தான் சஞ்சீவ். காலையில் நடந்ததை அவள் இயல்பாக ஏற்றுக் கொள்ளவில்லை என்பது அவனுக்கு புரிந்தது. அவனுக்கு வருத்தமாக இருந்தது.

   

அவன் கையால் குங்குமம் வைத்துக் கொள்ள கூட அவளுக்கு விருப்பமில்லையா? அவன் அருகில் வந்தாலே அவள் முகத்தில் மலர்ச்சி மறைந்துப் போகிறது... அவன் அருகில் இருந்தால் அவள் பேசா மடந்தை ஆகி போகிறாள்... இன்னும் எத்தனை நாட்களுக்கு தான் அவனும் இப்படி கண்ணாம்பூச்சி விளையாடுவது... மனதில் தோன்றிய பொறுமையின்மையை அடக்க அவன் பெரும் பாடு பட வேண்டி இருந்தது.

   

‘பொறுமை சஞ்சீவ்...’ என தனக்குள்ளே சொல்லிக் கொண்டவன், முன் தின இரவில் நடந்ததை நினைத்து பார்த்தான். அவன் மேல் அன்பில்லாமலா இந்து அவனை அப்படி இமைக்காமல் பார்த்தாள்? அன்புடன் போர்வையை போர்த்தி விட்டாள்? அவளுக்கு அவன் மேல் அன்பெல்லாம் இல்லாமல் இல்லை... அவனே மன்னிப்பு கேட்டு இறங்கி வந்த பிறகும் அவள் விலகிப் போக வேறு ஏதோ காரணம் இருக்க வேண்டும். என்னவாக இருக்கும்?

   

 🌼🌸❀✿🌷

   

கோவிலில் அனைத்து வேலைகளும் துரிதமாக நடந்தது. கிராமத்து முறைப்படி படையலிட்டு, குல தெய்வத்தை வணங்கி விட்டு கிளம்பிய போது அன

{/f90filter}ைவரின் மனமும் ஒரு வித அமைதியை அடைந்திருந்தது. பேசியப்படி வண்டிகளில் ஏறிய போது,

   

“சஞ்சீவ், நீங்களும் இந்துவும் கார்ல் சும்மா வெளியே எங்கேயாவது போயிட்டு வாங்களேன்...” 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.