தொடர்கதை - மலர்கள் நனைந்தன பனியாலே... - 05 - பிந்து வினோத்
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
துளசியின் கண்களை நேராகப் பார்த்த உதய், “என்ன கேள்வி இது அண்ணி?” என்றான்!
“நந்து அவ வயசுக்கு அதிகமாகவே கஷ்டப் பட்டுட்டா உதய்! இதுக்கு மேல அவ ஹர்ட் ஆக நான் அலோ செய்ய முடியாது,” என்றாள் துளசி.
“நீங்க அனுமதிக்கவே வேண்டாம்... இன்னைக்கு உங்க ஃப்ரென்ட் மேடம் சிங்கார சென்னைக்கு வராங்க. நான் போய் அவங்களை ரிசீவ் செஞ்சு....”
“ஸ்டாப் ஸ்டாப்.... நீ ஸ்டேஷன் போறீயா? நல்லா இருக்கு கதை!”
“ஏன் அண்ணி? நான் போனால் என்ன?”
“எந்த கம்பெனி எம்டி நேரா போய் புதுசா வர எம்ப்ளாயீயை ஸ்டேஷன்ல ரிசீவ் செய்து அழைச்சிட்டு வராங்க?”
“அப்போ?”
“செய்றதை ஒழுங்கா செய்யனும் உதய். அவளை ரிசீவ் செய்ற வேலை எல்லாம் நான் பார்த்துக்குறேன். ஆனால் உதய், சீரியஸா தானே சொல்ற? நந்து நல்ல பொண்ணு ஆனால் இந்த வயசு வித்தியாசம், அந்த சந்தோஷ் விஷயம், இதெல்லாம்...”
“அண்ணி நான் சாப்பிடுற இந்த சாப்பாட்டு மேல சத்தியம் செய்து சொல்றேன், இந்த ஜென்மத்துல எனக்கு கல்யாணம்னு ஒன்னு நடத்தா அது அவளோட மட்டும் தான்!”
“துளசி... சீக்கிரம் வா...”
சரத்தின் குரல் இப்போது பொறுமை இல்லாமல் ஒலித்தது.
“இதோ வரேங்க....” என்ற துளசி,