(Reading time: 7 - 13 minutes)
Malargal nanainthana paniyale
Malargal nanainthana paniyale

"உனக்கு தெரியாதா?" என்றான் காதலுடன்.

   

பிகு செய்யாமல் அவனின் அணைப்பை இயல்பாய் ஏற்றுக் கொண்ட துளசி,

   

"மை டியர் ஹஸ்பன்ட், நமக்கு கல்யாணமாகி மூணு வருஷம் மேல ஆச்சு" என்றாள்.

   

"அதனால என்ன?”

   

"ஹ்ம்ம்... ஒரு சின்ன குழந்தை இருக்கு..."

   

"சரி, அதுக்கு என்ன?"

   

"நீங்க இன்னும் இப்படி சின்ன பாப்பா மாதிரி இருந்தா என்ன செய்றது?"

   

"எதுவும் செய்ய வேண்டாம்! மூணு வருஷம் இல்லை முப்பது வருஷம் ஆனாலும் நான் எப்போவும் இப்படியே தான் இருப்பேன்..."

   

"அப்படியா சார்? முப்பது வருஷம் ஆகும் போது வயசாகிடும், எனக்கு நரை முடி எல்லாம் வந்திரும், உங்களுக்கும் கூட தான்... அப்புறமும் இப்படியே ரொமான்ஸ் செய்வீங்களாக்கும்???"

   

துளசியின் முகத்தை ஆராய்வதுப் போல் பார்த்த சரத்,

   

"வயசாகிடும், நரை வந்திரும், நீ அப்போ எப்படி இருப்ப??? கிழவி ஆகிடுவ..." என்றான்.

   

துளசி கோபத்துடன் முறைத்தாள்.

   

"ஹேய், நீ சொன்னதையே நான் திரும்பி சொன்னா இப்படி முறைக்குற?"

   

"நான் அப்படி சொன்னாலும், நீங்க அப்போவும் நான் அழகா இருப்பேன்னு சொல்லனும்! அதை விட்டுட்டு இது தான் சான்ஸ்ன்னு வயசாயிடும், கிழவி அப்படி இப்படின்னு சொல்றீங்க?"

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.