(Reading time: 7 - 13 minutes)
Malargal nanainthana paniyale
Malargal nanainthana paniyale

காமாட்சியின் குரல் கேட்டு உதயிடம் பேச்சை நிறுத்திய துளசி, அவள் சொன்னதை கவனித்து விட்டு, அதே தோரணையில்,

   

“அதெல்லாம் அம்மா, அப்பா கிட்ட இருந்து அவர் கத்துகிட்டது அத்தை. மாமா என்னைக்கு உங்க உதவி இல்லாம கிளம்பி இருக்கார்?” என்றாள் புன்னகை மின்ன.

   

செல்லமாக மருமகளின் காதை திருகிய காமாட்சி,

   

“வாயாடி! என்னையே கிண்டல் செய்றீயா? எல்லாம் அந்த பையன் கொடுக்குற இடம்,” என்றாள் சிரிப்புடன்!

   

“ஆமாம், உங்களுக்கு தானே? மாமா கிட்ட சொல்றேன் இருங்க!!!! என்னோட குழந்தை எங்கே அத்தை?”

   

“அரிசி கஞ்சி கொடுத்தேன். குடிச்சிட்டு சமத்தா படுத்து தூங்குறா!”

   

“என் குழந்தைன்னு பேரு, கண்ணிலேயே காட்ட மாட்டேங்குறீங்க. அவ மட்டும் வளர்ந்து என்னை யாருன்னு கேட்கட்டும் இருங்க...”

   

“ச்சே ச்சே என்ன துளசி நீ, உன்னை ஆன்ட்டின்னு கூப்பிட தெளிவா சொல்லி கொடுக்க மாட்டேன்...”

   

“உங்களை...”

   

“துளசி!!!!!”

   

சரத்தின் குரல் இப்போது அலறியது!

   

“போம்மா மகராசி, போ போய் அவனை சமாதானப் படுத்து. என் பேத்தியை நான் பார்த்துக்குறேன். அந்த சின்ன குழந்தையை நீ போய் கவனி!”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.