"ஓஹோ, அது தானா பிரச்சனை? ஒகேங்க துளசி செல்லம், முப்பது வருஷம் இல்ல அம்பது வருஷம் ஆன பிறகும் கூட நீ இப்படியே அதே அழகோட தான் இருப்ப, என்னை மயக்கிட்டே இருப்ப..."
"இது கொஞ்சம் ஓகே...." என்றாள் துளசி சிரிப்புடன்.
அவளின் சிரிப்பை ஒரு சில வினாடிகள் பார்த்து ரசித்த சரத்,
"நீ எப்போவும் இப்படியே சந்தோஷமா இருக்கனும் துளசி, என் கூடவே இருக்கனும்," என்றான்.
"உங்களை விட்டுட்டு நான் வேற எங்கே போவேன், உங்க கூடவே தான் இருப்பேன்... எப்போவும்!"
துளசி அவனின் மார்பில் தலை சாய்த்துக் கொண்டாள்.
அவளை மேலும் இறுக்கமாக அணைத்துக் கொண்ட சரத்,
"நீ என் வாழ்க்கையில வந்தப்புறம் தான் என் வாழ்க்கைக்கே அர்த்தம் வந்திருக்கு துளசி. உன் மேல எனக்கிருக்க அன்பை, ஆசையை சொல்லி முடிக்க முடியாது" என்றான்.
"நிஜமாவா?"
"நிஜமா! சொல்ல முடியாது ஆனால் செயல்ல காட்ட முடியும்!" சொல்லியபடி குனிந்து அவளின் கன்னத்தில் மெல்ல முத்தமிட்டான் சரத்.
வெட்கத்தில் சிலிர்த்தாலும் விலகாமல் அவனோடு இழைந்தே நின்றாள் துளசி.
"சரி கிளம்பட்டுமா?"