Page 7 of 8
"ம்ம்ம்...."
"கிளம்பவா?"
"ம்ம்ம்..."
இருவருக்கும் அணைப்பில் இருந்து வெளிவர மனமில்லை... அப்படியே நின்றிருந்தனர்.
"துளசி கண்ணா, லேட் ஆச்சு... அவன் ஆஃபிஸ்க்கு கிளம்பட்டும் விடு...."
காமாட்சியின் குரல் கீழே இருந்து ஒலித்தது.
"அச்சச்சோ...!"
துளசி அவசரமாக சரத்தை விட்டு விலகி நின்றாள்.
"அம்மா!!!! அலாரம் ஏதாவது செட் செய்து வச்சிருப்பாங்களோ? கரக்ட்டா டெய்லி டிஸ்டர்ப் செய்றாங்க..."
"அத்தையை எதுவும் சொல்லாதீங்க, நிஜமாவே லேட் ஆச்சு கிளம்புங்க."
"ஹும்... கிளம்புறேன்..."
"கிளம்புங்க..."
"நீ நந்திதாவை பிக்-அப் செய்ய ஸ்டேஷன் போறீயா?"
"ஆமாம், ஏன் கேட்குறீங்க?"
"பார்த்து போ... ஒரே கூட்டமா இருக்கும்... எப்போ எது வேணும்னாலும் உடனே எனக்கு கால்