“இங்கே பாரு உதய்....” என்று உதயிடம் தன் பேச்சை தொடர்ந்தாள்.
❀✿❀✿❀✿
உணவறைக்கு வர இருந்த மற்றொரு வழியின் அருகே நின்றிருந்தாள் காமாட்சி, சரத்தின் அம்மா! மருமகளுக்கும், உதய்க்கும் நடுவே நடந்த உரையாடலின் கடைசி சில பகுதியை கேட்டு கொஞ்சம் திகைத்துப் போய் நின்றிருந்தாள். உதய்க்கு துளசியின் தோழியின் மீது காதலா???
சரத்தின் உரத்தக் குரலில் உணர்வு பெற்ற காமாட்சி, தன்னை சுதாரித்துக் கொண்டு, உணவறைக்கு சென்றாள்.
ஆனாலும் காமாட்சியின் மனதினுள் ரேவதியை பற்றிய கவலை தோன்றி இருந்தது.
இந்த பையனுக்கு காதலிக்க அவனை விட சின்ன பொண்ணு ஒருத்தியுமா கிடைக்கவில்லை? அப்படி இருந்தாலே ரேவதி சம்மதிக்குறது கஷ்டம்... இவங்க சொல்ற நந்திதா விஷயம் எல்லாம் நடக்குற விஷயமா?
மனதில் உழன்ற சிந்தனையுடன் உணவறைக்கு சென்றாள் காமாட்சி. அங்கே துளசி மும்முரமாக உதய்க்கு அறிவுரை வழங்கி கொண்டிருந்தாள்.
என்ன பொறுப்பான மருமகள் இவள்!
மருமகளின் பேச்சைக் கேட்டு தானாக முகம் மலர,
“துளசி கண்ணா, இந்த பையனை விட்டுட்டு, உன் கிட்ட மாட்டிட்டு முழிச்சுட்டு இருக்க ஒருத்தன் இருக்கானே, அவனை போய் முதல்ல பாரு. பாவம் சரத் எவ்வளவு நேரமா கூப்பிடுறான், போ போய் முதல்ல அவன் ஆஃபிஸ் கிளம்புற வேலையை பாரு... நீ போகாம அவன் என்னைக்கு கிளம்பி இருக்கான்?” என்றாள் கிண்டலாக.