“இருங்க இருங்க, அவர் ஆஃபிஸ் கிளம்பட்டும் அப்புறம் சொல்றேன்...”
துளசி கிளம்பி செல்ல, காமாட்சி சிரிப்புடன் ஒரு நாற்காலியில் அமர்ந்தாள்.
எதிரில் இருந்த உதயிடம் எதுவுமே தெரியாதவளைப் போல்,
“என்னடா உதய், எப்படி இருக்க? எப்போ கல்யாணம் செய்துக்கப் போற?” எனக் கேட்டாள்.
"கல்யாணம் தானே பெரியம்மா, பொறுமையா செய்துக்கலாம், ஒரு பத்து பதினஞ்சு வருஷம் போகட்டும்," என்றான் உதய்.
"என்னப்பா அவ்வளவு சீக்கிரமா சொல்ற, ஒரு இருபது இருபத்தஞ்சு வருஷம் ஆகட்டுமே. ரிடையர் ஆகும் போது கல்யாணம் செய்துக்கோ சரியா இருக்கும்."
"உங்க பையனுக்கு மட்டும் இருபத்தி ஏழு வயசுல கல்யாணம் செய்து வச்சுட்டு, எனக்கு இப்படி அட்வைஸ் தரீங்க??? நீங்க ரொம்ப நல்லவங்க பெரியம்மா!!!"
“சரத் கல்யாணம் செய்துக்க ஆசைப் பட்டான் கல்யாணம் செய்து வச்சோம். உனக்கு ஆசை இல்லையே அப்புறம் என்ன அவசரம் பொறுமையா செஞ்சுக்கோ!"
❀✿❀✿❀✿
காமாட்சியும், உதயும் தங்களின் கல கல பேச்சை தொடர்ந்துக் கொண்டிருக்க, கணவனை தேடி சென்ற துளசி அங்கே அவன் தயாராகி இருப்பதை பார்த்து விட்டு முறைத்தாள்.
"அது தான் ரெடி ஆகிட்டீங்கள்ள அப்புறம் எதுக்கு அப்படி ஒரு அலறல்?"
அவளை தன் பக்கம் இழுத்து அணைத்துக் கொண்ட சரத்,