என்றாள் வீணா. அவளின் முகத்தில் குறும்பும் கேலியும் கொப்பளித்துக் கொண்டிருந்தது. இந்து அவசரமாக,
“இல்ல பரவாயில்லை...” என ஏதோ சொல்லும் போதே, வீணா கீதாவிடம் கண்களால் சிக்னல் செய்தாள். என்ன என்று முழுவதாக புரியாத போதும், ஏதோ விஷயம் என்ற அளவில் புரிந்ததால், கீதாவும்,
“இந்து, சும்மா வேண்டாம்னு சொல்லாதே... கோவிலுக்கு போயிட்டு வீட்டுக்கு போகனும்னு சொல்வாங்க. நீங்க இரண்டு பேரும் ஒன்னா கார்ல் வாங்க, நாங்க வேன்ல போறோம்,” என்றாள்.
தோழிகளை பற்றி இந்துவிற்கு நன்றாக தெரியும் என்பதால். இதற்கு மேல் மறுத்து பேசி எதுவும் நடக்க போவதில்லை என்பது அவளுக்கு புரிந்தது. அதனால் மேலே எதுவும் சொல்லாமல் சஞ்சீவுடன் காரில் கிளம்பினாள்.
பாதி தூரம் வரை இருவருமே எதுவும் பேசவில்லை. பின், இந்து பக்கம் பார்த்தான் சஞ்சீவ்! நேராக சாலையை பார்ப்பது போல அவள் பாவனை செய்துக் கொண்டிருக்கவும், எதுவும் சொல்லாமலே காரை கிராமத்து மண் சாலையின் ஓரமாக நிறுத்தினான்.
“இந்து, நான் உன் கூட பேசனும்!”
இந்து அப்போதும் அவனை பார்க்கவில்லை. சாலையையே பார்த்துக் கொண்டு, “இப்போ எதுக்கு இதெல்லாம், காரை எடுங்க, அப்புறம் பேசலாம்,” என்றாள்.
“இல்ல இந்து, எனக்கு இப்போவே பேசனும். நான் நேத்தே சொன்னேன் தானே? நாம...”
{/f90filter}>
சஞ்சீவ் தொடர்ந்து பேச இடம் கொடுக்காமல், “ப்ளீஸ், எனக்கு பிடிக்கலை, நாம வீட்டுக்கு போகலாம்,” என்றாள் இந்து பிடிவாதத்துடன்!
“என்ன பிடிக்கலை உனக்கு?”